மும்பை குண்டு வெடிப்பு: 3 பேருக்கு தூக்குசஞ்சய் தத்துக்கு தண்டனை நாளை அறிவிப்பு
மும்பை:மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு இன்று தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பெரும் பொருட் சேதமும் ஏற்பட்டது.
![]() |
இந்த வழக்கில் மொத்தம் 100 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அவர்களில் நடிகர் சஞ்சய் தத்தும் ஒருவர். குற்றவாளிகளுக்கு படிப்படியாக தண்டனை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில் இன்று 3 பேருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. அப்துல் கனி துர்க், பெர்வேஸ் நசீர் ஷேக், முகம்மது முஷ்டாக் தரணி ஆகிய மூன்று பேருக்கும் இன்று மரண தண்டனை அறிவிக்கப்பட்டது.
ஒர்லி பகுதியில் உள்ள செஞ்சுரி பஜார் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திலேயே செஞ்சுரி பஜார்தான் மிகவும் ெகாடூரமானது. இங்கு மட்டும் 88 பேர் உயிரிழந்தனர்.
இந்த மூன்று பேர் உள்பட மொத்தம் 16 பேர் செஞ்சுரி பிளாஸா சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இவர்கள் மீது துபாயில் ரகசியக் கூட்டம் நடத்தி சதித் திட்டம் தீட்டியது, பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி மேற்ெகாண்டது, வாகனங்களில் ஆர்.டி.எக்ஸ் குண்டுகளைப் ெபாருத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
நசீர் ஷேக் மீது தெற்கு மும்பையில் உள்ள கதா பஜார் பகுதியில் குண்டு வைத்த சம்பவத்திலும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ரூ. 37 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும் சேதமடைந்தன.
பந்த்ராவில் உள்ள சீராக் ஹோட்டலிலும் குண்டு வைத்தது ஷேக்தான். ஆனால் இங்கு உயிரிழப்பு ஏதும் இல்ைல.
தீர்ப்பை அறிவித்த தடா நீதிபதி பி.டி.கோடே, மூன்று பேரும் நாட்டுக்கு மட்டுமல்லாது, முஸ்லீம் மதத்திற்கும் பெரும் களங்கம் இழைத்து விட்டனர் என்றார்.
இந் நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நடிகர் சஞ்சய் தத் மீதான தண்டனை நாளை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் முறையாக மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் 80 பேருக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 14 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications