விக்ரம் வீட்டு சுவர் இடிந்து விழுந்துகொத்தனார் பலி - ஒருவர் காயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:நடிகர் விக்ரம் வீட்டு சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில், 50 வயது கொத்தனார் பலியானார். இன்னொரு தொழிலாளர் படுகாயமடைந்தார்.

நடிகர் விக்ரமின் வீடு பெசன்ட் நகர் பகுதியில் உள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்த வீட்டைப் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது சுற்றுச் சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இன்று காலை தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போபாது திடீரென சுவர் இடிந்து விழுந்தது.

அதில், நாகப்பன் (50) என்ற தொழிலாளி சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அய்யப்பன் (52) என்ற தொழிலாளி படுகாயமடைந்தார். உடனடியாக அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இறந்தவரும், காயமடைந்தவரும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இப்போது விக்ரம் வெளிநாட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+