கும்பகோணம் தீ விபத்தில் இறந்தகுழந்தைகளுக்கு ரூ. 60 லட்சத்தில் நினைவிடம்
கும்பகோணம்:கும்பகோணத்தில் கடந்த 2004ல் தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் நினைவாக தமிழக அரசு நினைவிடம் அமைக்கிறது.
கடந்த 2004 ஜூலை 16ம் தேதி ஸ்ரீகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் நினைவாக தமிழக அரசின் சார்பில் நினைவு மண்டபம் அமைக்க பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. குழந்தைகள் இறந்த பள்ளி வளாகத்திலேயே நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இந் நிலையில் குழந்தைகள் நினைவகத்தை பாலக்கரை பகுதியில் காவிரி நதிக் கரையில் 14,000 சதுர அடியில் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சுமார் ரூ.60 லட்சம் மதிப்பில் இந்த நினைவிடம் அமையவுள்ளது.
இந்த நினைவிடத்தில் தியான மண்டபம், குழந்தைகள் பூங்கா, கம்ப்யூட்டர் மையம், வீடியோ மற்றும் ஆடியோ நூலகம், மீட்டிங் ஹால் மற்றும் பொது நூலகம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
மேலும் இறந்த குழந்தைகளின் நினைவாக சிலையும் வைக்கப்படவுள்ளது. இதை வடிவமைக்கும் பொறுப்பு தமிழக அரசின் கலை மற்றும் சிற்பக் கல்லூரி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரியின் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், நினைவுச் சிலை எட்டு பக்கங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது. உயர்ந்த நிலையில் உள்ள தாமிரத்தை கொண்டு தயார் செய்யப்படும். 9 அடி உயரத்தில், சுமார் 2.5 டன் எடையில் இது உருவாக்கப்படும்.
இதற்கான மாடலை கல்லூரியின் 3 விரிவுரையாளர்கள் களிமண்ணில் வடிவமைத்துள்ளனர்.
இன்னும் ஓரிரு தினங்களில் இந்த மாதிரி சின்னத்தை நகராட்சி அதிகாரிகள், தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர் பார்வையிடுவர். அவர்களின் யோசனைகளையும் கேட்டபின் சிலை தயாரிக்கும் பணி ஆரம்பமாகும்.
4 மாதங்களில் இந்த நினைவுச் சிலை தயாராகிவிடும் என்றார் பாலசுப்பிரமணியன்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications