கிழக்கை வலுப்படுத்த உதவுங்கள்உலக நாடுகளுக்கு ராஜபக்ஷே கோரிக்கை
கொழும்பு:போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் கிழக்கு மாகாணத்தை முன்னேற்றி வலுப்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக் ஷே கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலைப் புலிகள் வசம் இருந்த கிழக்குப் பகுதியை ராணுவம் மீட்டுள்ளது. இதையொட்டி கொழும்பில் ராணுவத்தைப் பாராட்டி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜபக் ஷே, இலங்கையின் கிழக்குப் பகுதி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது. போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கை சீரமைக்க உலக நாடுகள் நமக்கு உதவும் என்று நம்புகிறேன். உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
கிழக்குப் பகுதியில் மீண்டும் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. அங்கு தேர்தல் நடத்தப்படும்.
கிழக்கில் உதயமாகியுள்ள புதிய விடியலை சீர்குலைக்க யாரும் முயலக் கூடாது. ராணுவத்தின் வலிமையை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.
உலக நாடுகளின் ராணுவத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாக இலங்கை ராணுவம் இன்று உயர்ந்து நிற்கிறது.
உண்மை நிலையை உணர்ந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்ளை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். விடுதலைப் புலிகளின் எச்சரிக்கைக்கு நான் பயப்பட மாட்டேன். அவர்களின் மிரட்டல் என்னை ஒன்றும் செய்யாது என்றார் ராஜபக் ஷே. இந்த நிகழ்ச்சியில், ராணுவ அணிவகுப்பும் நடத்தப்பட்டது.
ரூ. 1400 கோடிக்கு புலிகள் ஆயுதம்:
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் ரூ. 1400 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்த தகவலை ஜேன்ஸ் பாதுகாப்பு இதழ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப்புலிகள் அமைப்பு வருடத்திற்கு ரூ.1400 கோடிவரை ஆயுதங்கள் வாங்குவதற்காக செலவிடுகிறது.
தனி ஒரு இயக்கமாக இருந்து கொண்டு தரைப்படை, கப்பற்படை மற்றும் வான்படை வைத்திருக்கும் ஒரே இயக்கம் உலகிலேயே இது ஒன்றாகத்தான் இருக்கும்.
இவர்களுக்கு ஆயுதம் சப்ளை செய்யும் முக்கிய நாடு கம்போடியா. இதுதவிர ஆப்கானிஸ்தான், லெபனான், வடகொரியா, துருக்கி, கிரீஸ், சைப்ரஸ் மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளிலிருந்தும் ஆயுதங்கள் வருகின்றன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதங்களை தயாரிக்க தனியாக ஒரு பிரிவு உள்ளது. வெளிநாட்டிலிருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு என தனியாக ஒரு பிரிவு உள்ளது என்று ஜேன்ஸ் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபு நாடுகளின் விமான சேவை நிறுத்தம்:
இற்கிடையே, இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறையால், பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், தனது விமான சேவையை நிறுத்தப் போவதாக அபுதாபியைச் சேர்ந்த எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் இந்த நிறுவனத்தின் விமான சேவை நிறுத்தப்படவுள்ளதாம்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணை தலைவர் கீர்ட் போவீன் கூறுகையில், இலங்கைக்கு எங்களது விமானங்கள் மூலம் செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. அங்கு நிலவும் வன்முறையால் ஏற்பட்டுள்ள பீதியே இதற்குக் காரணம்.
எனவே இலங்கைக்கான எங்களது விமான சேவையை செப்டம்பர் 9ம் தேதியுடன் நிறுத்த முடிவு செய்துள்ளோம். இருப்பினும் எங்களது நிறுவனம் மூலம் கொழும்பு செல்ல விரும்புவோரை, இலங்கை அரசின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்வோம் என்றார் அவர்.
விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்குப் பிறகு எதிஹாட் விமான சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்து விட்டதாம்.
சமீபத்தில்தான் கொழும்பு விமான நிலையத்தில் இரவு நேர சேவை மீண்டும் தொடங்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, இலங்கைக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாம். ஜனவரி - ஏப்ரல் மாத காலகட்டத்தில் 14.8 சதவீத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாம்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications