பிரிட்டனுக்கு ரஷ்யா பதிலடி: 4 தூதரக அதிகாரிகள்வெளியேற்றம்
மாஸ்கோ:இங்கிலாந்து அரசின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் நான்கு பேரை ரஷ்யா வெளியேற்றியுள்ளது.
முன்னாள் ரஷ்ய உளவாளி அலெக்சாண்டர் லிட்வினென்கோ அணுக் கதிர்வீச்சுக்கு ஆளாகி இங்கிலாந்தில் இறந்தார். அவர் குடித்த டீயில் அணுக் கதிர்வீச்சு கலக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அது தொடர்பாக தாங்கள் சந்தேகப்படும் ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி லுகோவாய் என்பவரை தங்கள் வசம் ஒப்படைக்குமாறு ரஷ்யாவிடம் கோரியது இங்கிலாந்து. ஆனால் அதை ஏற்க ரஷ்யா மறுத்து விட்டது.
தாங்கள் கோரிய பல கைதிகளை நாடு கடத்த இங்கிலாந்து முன்வராததால், தாங்களும் இங்கிலாந்து கேட்கும் நபரை வழங்க முடியாது என்று ரஷ்யா கூறி விட்டது.
இதனால் கடுப்பான இங்கிலாந்து சமீபத்தில், ரஷ்ய தூதரக அதிகாரிகள் நான்கு பேரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. இங்கிலாந்தின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கு தக்க பதிலடி தரப்படும் எனவும் எச்சரித்தது.
இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தைச் சேர்ந்த நான்கு பேரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மிக்கைல் கம்யானின் கூறுகையில், இதுதொடர்பாக நான்கு பேருக்கும் உத்தரவு வழங்கப்பட்டு விட்டது. அவர்களை ரஷ்யா விரும்பவில்லை என்பதையும் தெரிவித்து விட்டோம் என்றார் அவர்.
இந்த நான்கு பேரும் 10 நாட்களுக்குள் ரஷ்யாவை விட்டு போக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர தீவிரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பையும் இனி இங்கிலாந்துக்குத் தருவதில்லை என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது.
மேலும், ரஷ்ய அதிகாரிகள் யாரும் இங்கிலாந்துக்கு இனி செல்ல மாட்டார்கள். அதேபோல இங்கிலாந்து அதிகாரிகளின் விசாக்களும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
முன்னதாக இங்கிலாந்து தூதர் ஆண்டனி பிரன்டனை ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் கிரஷ்கோ வரவழைத்து அவரிடம் சில கடிதங்களைக் கொடுத்தார். இவற்றை இங்கிலாந்து அரசிடம் ஒப்படைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
ரஷ்யாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான இந்த தூதரகப் போர் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications