மாணவியுடன் குடும்பம் நடத்திய ஆசிரியர் கைது!
நாகர்கோவில்மனைவி, குழந்தைகளை நட்டாற்றில் விட்டு விட்டு, கல்லூரி மாணவியுடன் குடும்பம் நடத்தி வந்த உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் வஞ்சி ஆதித்தன் புதுத்தெருவைச் சேர்ந்தவர் அழகுராஜ். வடசேரியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் உடற் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
![]() |
இவருக்கு ரமணி என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அழகுராஜ் வேலை பார்த்து வரும் பள்ளியில் பானு என்கிற மாணவி அவர் வேலை பார்த்து வந்துள்ள பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்து வந்துள்ளார்.
ஆனால் பானு இப்போது கல்லூரியில் படித்து வருகிறாராம். விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தால் அழகுராஜாவை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். ஆனால் அவரது அழகில் மயங்கிய அழகுராஜ், பானு மீது காதல் கொண்டார்.
இவர்களின் கள்ளக்காதல் அழகுராஜாவின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது.கள்ளக் காதலை பானுவும் ஏற்றுக் கொண்டார். அழகுராஜை விட மனமில்லாத பானு, அழகுராஜின் மகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பதாக கூறி வீட்டுக்கு வர ஆரம்பித்தார்.
![]() |
டியூஷன் ஒரு பக்கம் நடக்க, அழகுராஜ்-பானுவின் கள்ளக்காதலும் மறுபக்கம் ஆழமாகிக் கொண்டு சென்றது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் வேகம் பிடிக்க வீட்டை விட்டு வெளியேறி விட்னர். கீழ புத்தேரி என்ற இடத்தில் வீடு எடுத்து பானுவுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தார் அழகுராஜ்.
இது ரமணிக்குத் தெரிய வர நேராக கணவரிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். ஆனால் உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி ரமணியை அழகுராஜ் மிரட்டியுள்ளார். இதையடுத்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் ரமணி.
போலீஸார் விசாரணை நடத்தியபோது பானுவை, அழகுராஜ் பதிவுத் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இந்தத் திருமணத்திற்கு பானுவின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதையடுத்து அழகுராஜ், பானு, தாயார் பகவதி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் பானுவின் சகோதரர் ராஜ்குமார், சித்தியின் மகன் மதுசூதனன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்














Click it and Unblock the Notifications