மகளிர் குலத்துக்குக் கிடைத்த வெற்றி: கருணாநிதி
சென்னை:பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது மகளிர் குலத்துக்குக் கிடைத்த வெற்றி என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
![]() |
அப்போது செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இது மகத்தான வெற்றி, மகளிர் குலத்துக்குக் கிடைத்த வெற்றி. பதவியேற்பில் கலந்து கொள்ள 24ம் தேதி டெல்லி போகிறேன் என்றார் கருணாநிதி.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில்:
கேள்வி: அதிமுகவிலிருந்து நான்கு பேர் அணி மாறி வாக்களித்திருப்பது குறித்து
கருணாநிதி: அந்தக் கட்சியின் தலைவிதான் பதில் சொல்ல வேண்டும்.
கேள்வி: கட்சித் தலைமையின் முடிவு பிடிக்காமல்தான் இவ்வாறு வாக்களித்துள்ளார்களா?
கருணாநிதி: எனக்குத் தெரியாது.
கேள்வி: துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக நிலைப்பாடு என்ன?
கருணாநிதி: அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஹமீத் அன்சாரியை ஆதரிப்பதுதான் எங்களது நிலைப்பாடு.
கேள்வி: சில வாக்குச் சீட்டுக்களில் ஜெய் ஸ்ரீராம் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்களே?
கருணாநிதி: அவ்வளவு பெரிய சேது சமுத்திரத் திட்டத்தில் ராமர் பாலம் இருக்கிறது என்று பேசுகிறவர்கள் வாக்குச் சீட்டில் ராமர் பெயரை எழுதுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? என்றார் கருணாநிதி.
முன்னதாக பிரதீபா பாட்டீலின் வெற்றிக்குத் துணை நின்றதற்காக முதல்வர் கருணாநிதியை, தொலைபேசி மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடர்பு கொண்டு பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications