கேரளாவுக்கு ரயிலில் ரேஷன் அரிசி கடத்தல்போலீஸ் - டிடிஆர்கள் உடந்தை!
திருநெல்வேலி: தமிழகத்திலிருந்து ரயில்வே போலீஸார் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் உதவியுடன் கேரளாவுக்கு அரிசி கடத்தப்படவிருந்தது, கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டது.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தினமும் லாரிகள் மூலம் பெருமளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க அரசுத் தரப்பில் பெரிய அளவில் நடவடிக்கை எதுவும் இல்லாததால் கடத்தல் ஜே ஜே என நடந்து வருகிறது.
இந்த நிலையில் ரயில் மூலம் கேரளாவுக்கு கடத்தப்பட்ட அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 18-ந் தேதி காலை நெல்லையிலிருந்து புனலூர் நோக்கி ரயில் கிளம்பியது. இந்த ரயில் தென்காசி ரயில் நிலையத்தை அடைந்த போது டிக்கெட் பரிசோதகர் செல்லத்துரை அதிக லக்கேஜ் வைத்திருந்த பயணிகளிடம் அபராதம் வசூலித்து கொண்டிருந்தார்.
அப்போது, ரயிலில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டன. அதைப் பார்த்த ரயிலவே போலீஸ்காரர் லாரன்ஸ் ஆப்ரகாம் ரயிலில் அரிசி மூடை ஏற்றுவதை கண்டித்துள்ளார். ஆனால் அதை நிராகரித்த செல்லத்துரை, அரிசி மூட்டைகளை ஏற்றுவதைத் தடுக்கக் கூடாது என லாரன்ஸிடம் வாக்குவாதம் செய்தார்.
இது குறித்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டதில் செல்லத்துரையை ஆப்ரகாம் தாக்கியதாக தெரிகிறது. காயமடைந்த அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் பரவியதும், செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடிய ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவுக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி பெருமளவில் கடத்தப்படுகிறதாம். இந்தக் கடத்தலில் சில ரயில்வே காவலர்களுக்கும், டிக்கெட் பரிசோதகர்களுக்கும் தொடர்பு உள்ளது.
குறிப்பாக செங்கோட்டை ரயில் நிலையத்தில் பணியாற்றும் ரயில்வே காவலர்களும், டி.டி.ஆர்.களும் இந்தக் கடத்தலுக்கு முழு ஆதரவுடன் உள்ளதால் அவர்களை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications