16 வயது பெண்ணை பிளாக் மெயில் செய்துவிபச்சாரத்தில் தள்ளிய நடிகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த இளம்பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய துணை நடிகர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த பட்டாளத்தைச் சேர்ந்தவர் நதியா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மாமாவான பிரிஜேஷ் பிரபல இயக்குநரிடம் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

நடிப்பில் ஆர்வம் கொண்ட நதியா தனது மாமாவை சந்திக்க சூட்டிங் ஸ்பாட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

பல மாதங்களுக்கு முன் மைலாப்பூரில் மச்சான் என்ற பட சூட்டிங்கிற்கு நதியா சென்றார். அங்கு சரவணன்(33)என்ற துணை நடிகருடன் நதியாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

எனக்கு பல இயக்குனர்களைத் தெரியும், உன்னை பெரிய நடிகையாக்குகிறேன் என்று கூறியுள்ளார் சரவணன்.

அதை நம்பிய நதியா, சரவணன் அழைத்த இடத்துக்கெல்லாம் சென்றுள்ளார். இந் நிலையில் நதியாவை காதலிப்பதாக சரவணன் கூறியுள்ளார்.

இந் நிலையில் நதியாவை கொளத்தூரில் உள்ள மோகன் கார்டன் என்ற பங்களாவுக்கு அழைத்துச் சென்றார் சரவணன். அங்கு சரவணனுடன் கொரட்டூரைச் சேர்ந்த பழனி(37), ஜெயக்குமார்(32) ஆகியோரும் இருந்தனர்.

நதியாவுக்கு அவர்கள் குளிர்பானம் தந்தனர். அதைக் குடித்த நதியா மயங்கினார்.

இதையடுத்து மூவரும் நதியாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த உடலுறவை வீடியோவிலும் படம் பிடித்துள்ளார் சரவணன்.

மயக்கம் தெளிந்த நதியா தனது நிலையை உணர்ந்து கதறி அழுதுள்ளார். ஆனால், நன் மட்டும் தான் உன்னை அனுபவித்தேன். நிச்சயம் திருமணம் செய்து கொள்கிறன் என்று சத்தியம் செய்துள்ளார் சரவணன். மேலும் சினிமா வாய்ப்புக்காக சில பேரை சந்திக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

சினிமா மோகத்தில் இருந்த நதியாவும் அவர் சொன்னதையெல்லாம் கேட்டுள்ளார். இந் நிலையில் தி.நகரில் டெய்லராக உள்ள மணிபாரதி என்பவரின் வீட்டுக்கு நதியாவை சரவணன் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு நதியாவை மணிபாரதி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்காக மணிபாரதியிடம் சரவணன் பணமும் வாங்கியுள்ளார். இதையடுத்து போலீஸை அணுக நதியா முடிவு செய்தார்.

ஆனால், உன்னுடைய உடலுறவு காட்சிகளை எல்லாம் வீடியோவில் எடுத்து வைத்துள்ளேன். போலீசுக்கு போனால் இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதில் பயந்து போனார் நதியா. இதைத் தொடர்ந்து மிரட்டி மிரட்டியே பல பேருக்கு நதியாவை சரவணன் விருந்தாக்கியுள்ளார்.

இந் நிலையில் சரவணனிடம் அந்த வீடியே சிடியை கேட்டுள்ளார் நதியா. அதற்கு, உன் காதணிகளைக் கொடு என்று சொல்லி கம்மலையும் பறித்துச் சென்று விட்டார் சரவணன்.

காதணி இல்லாமல் நதியா வீட்டுக்குச் சென்றதை பார்த்த பெற்றோர்கள் அவரை விசாரித்துள்ளனர். அப்போது தான் நதியா தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி கதறி அழுதுள்ளார்.

பரிதவித்துப் போன பெற்றோர் கமிஷனர் லத்திகா சரண் மற்றும் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோரிடம் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீஸார் சரவணன், பழனி, மணிபாரதி, கோபிநாத் மற்றும் ஜீவரத்தினம் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நதியா மைலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+