நக்சல்கள் நடமாட்டம்-மதுரையும் தப்பவில்லை!

Subscribe to Oneindia Tamil

மதுரை:மதுரை அழகர்கோவில் மலைப் பகுதிகளில் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ளதா எனப் போலீசார் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம், முருகமலைப் பகுதியில் ஆயுதப்பயிற்சி பெற்ற நக்சல்கள் 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 5 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

தப்பிய நக்சல்களை பிடிக்க அதிரடிப்படை டிஜிபி விஜயகுமார் தலைமையில் போலீசார் தமிழகத்தின் பல மலை, காட்டுப் பகுதிகளிலும் தேடி வருகின்றனர்.

நக்சல்களைக் கண்காணிக்க தமிழகத்தின் பல மலைப் பகுதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் மதுரையைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளான அழகர்கோவில், அலங்காநல்லூர், குட்லாடம்பட்டி, ஏழுமலை ஆகிய பகுதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க மதுரை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கண்காணிப்பு கோபுரங்களின் மூலம் இரவு, பகலாக மலைப் பகுதிகள் மேற்பார்வையிடப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+