கர்நாடகத்திலிருந்து 40 வெளிநாட்டு இஸ்லாமிய மாணவர்கள் மாயம்!
பெங்களூர்:கர்நாடகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்து வந்த 40 வெளிநாட்டு முஸ்லீம் மாணவர்கள் திடீரென மாயமாகி விட்டனர். இவர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், ஈராக், இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக 2 இந்திய டாக்டர்கள் இங்கிலாந்திலும், ஒரு டாக்டர் ஆஸ்திரேலியாவிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட டாக்டர் முகம்மது ஹனீப் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்பது உறுதியாகியுள்ளது. எனவே விரைவில் அவர் விடுவிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இந் நிலையில் கைதான 3 பேரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வழங்குமாறு கர்நாடக காவல்துறைக்கு மத்திய உளவுத்துறை உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து பெங்களூர், மைசூர், பெல்காம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் குறித்த தகவலை கர்நாடக போலீஸ் சேகரிக்க ஆரம்பித்தனர்.
இந்த கணக்கெடுப்பும் விவரம் சேகரிக்கும் பணியும் தொடங்கியதில் இருந்து 40 வெளிநாட்டு மாணவர்க் கல்லூரிகளை விட்டு மாயமாகியுள்ளனர். அவர்கள் கல்வி நிலையங்களுக்கு வருவதை நிறுத்திவிட்டனர்.
அவர்கள் எங்கு போனார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் இப்போது நிச்சயம் கர்நாடகத்தில் இல்லை என்று காவல்துறை உறுதியாகத் தெரிவித்துள்ளது.
மாயமான 40 பேரும் பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், ஈராக், இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications