கட் ஆன கரண்ட் - வராண்டாவில்படுத்துத் தூங்க விரும்பிய கலாம்!
சென்னை:அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால், நேற்று இரவு முழுவதும் ஆளுநர் மாளிகையில் தங்கினார் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அப்துல் கலாம் நேற்று இரவு சென்னை வந்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியை தொடங்கவுள்ள கலாம், சென்னை வந்ததும் நேராக பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கலாம் வந்த சில நிமிடங்களிலேயே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மின்சாரம் போய் விட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக மின்சாரம் வரவில்லை. இதனால் புழுக்கத்தில் நெளிந்த கலாம், விருந்தினர் மாளிகை வளாக வராண்டாவில் காற்றாட படுத்துத் தூங்க விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து கலாமை அருகில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். நேற்று இரவு முழுவதும் கலாம் அங்குதான் தங்கியிருந்தார்.
இரவு 11 மணிக்கு கலாம் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். இன்று காலை 10.30 மணிக்குத்தான் அவர் மீண்டும் அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்குத் திரும்பினார் என்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது?












Click it and Unblock the Notifications