அடுத்த ராணுவத் தலைமை தளபதி தீபக் கபூர்
டெல்லி:புதிய ராணுவத் தலைமைத் தளபதியாக தற்போதைய துணைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் தீபக் கபூர் நியமிக்கப்படவுள்ளார்.
இந்திய ராணுவத் தலைமைத் தளபதியாக ஜெனரல் ஜோகீந்தர் ஜஸ்வந்த் சிங் உள்ளார். அவரது பதவிக்காலம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து புதிய ராணுவத் தலைமைத் தளபதியாக லெப்டினெனன்ட் ஜெனரல் தீபக் கபூர் நியமிக்கப்படவுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.
தீபக் கபூரின் நியமனத்தை மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தீபக் கபூர் இதற்கு முன்பு வடக்குப் பிராந்திய ராணுவ கமாண்டராக இருந்தார். தற்போது துணைத் தளபதியாக உள்ளார்.
தலைமைத் தளபதி பதவிக்கு மேற்குப் பிராந்திய கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் தல்ஜீத் சிங், தென் பிராந்திய கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஆதித்யா சிங் ஆகியோரும் போட்டியில் இருந்தனர்.
மேற்கண்ட மூன்று அதிகாரிகளுமே 1967ம் ஆண்டு ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்தவர்கள் ஆவர். மூன்று பேருமே இந்திய ராணுவ அகாடமியில் ஒன்றாக பயிற்சி பெற்றவர்களும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications