பெண் அதிகாரியை ஆபாச படமெடுக்க முயன்றுகத்தியால் குத்திய டிஸ்மிஸ் அதிகாரி
சென்னை:தாம்பரம் சானிட்டோரியம் தீயணைப்பு பயிற்சி நிலையத்தில் பெண் அதிகாரியை ஆபாச படம் எடுக்க முயன்று கத்தியால் குத்திய முன்னாள் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(37). இவர் சென்னையில் தீயணைப்பு துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நுங்கம்பாக்கத்தில் அரசு அலுவலக குடியிருப்பில் தங்கியிருந்தார்.
ஜெயக்குமார் பணிக் காலத்தில் வேலைக்கு குடிபோதையில் தான் வருவாராம். அதுமட்டுமில்லாமல் பெண் அதிகாரிகள் மற்றும் குடியிருப்பில் இருப்பவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக பலமுறை சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
![]() |
கடந்த மார்ச் மாதம் தாம்பரம் சானிட்டோரியம் தீயணைப்பு நிலைய அதிகாரியாக வேலை பார்த்தபோது அங்கு பணிபுரிந்த துணை இயக்குனர் பிரியாவை ஆபாசமாக திட்டி, அவரிடம் தவறான முறையில் நடந்துள்ளார். இதற்காக ஜெயக்குமாரை வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த டிஸ்மிஸை எதிர்த்து ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் பிரியா, அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தார்.
இதனால் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவரின் டிஸ்மிஸ் உத்தரவு செல்லும் என நீதிமன்றம் அறிவித்தது.
பிரியாவின் கணவர் வருமான வரித் துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
காலை 10 மணிக்கு வழக்கம்போல் சாதாரண உடையில் அலுவலகத்துக்கு வந்த பிரியா, அலுவலகத்தின் முதல் மாடியில் உடை மாற்ற சென்றார்.
சீருடையை மாற்றிக் கொண்டிருக்கும்போது, குளியலறைக்குள் மறைந்திருந்த டிஸ்மிஸ் ஜெயக்குமார் பிரியாவை படம் எடுக்க முயன்றார். ஆனால், பிளாஷ் ஒளியைப் பார்த்த ப்ரியா சந்தேகமடைந்து குளியலறையைத் திறந்தார்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த ஜெயக்குமாரைப் பார்த்து கத்தினார். இதையடுத்து ஜெயக்குமார் ப்ரியாவை கத்தியால் குத்தினார்.
இதில் காயமடைந்த பிரியா அவரை தள்ளிவிட்டுவிட்டு வெளியில் ஓடினார். ஆனால், அப்படியும் விடாத ஜெயக்குமார் பிரியாவை விரட்டிக் கொண்டே வந்து மீண்டும் குத்த முயன்றார்.
ரத்தம் கொட்ட வெளியில் ஓடி வந்த ப்ரியாவைப் பார்த்து மற்ற ஊழியர்கள் உஷாராகி விரட்டி வந்த ஜெயக்குமாரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து ஜெயக்குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, ப்ரியாவை ஆபாச படம் எடுத்து மிரட்ட நினைத்ததாகக் கூறியுள்ளார் ஜெயக்குமார்.
தாம்பரம் சானிட்டோரியம் தீயணைப்பு நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். அத்தனை பேரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு டிஸ்மிஸ் ஆன ஒருவர் எப்படி உள்ளே நுழைந்தார் என்று தெரியவில்லை.
இதில் வேறு யாராவது சம்பந்தபட்டுள்ளார்களா என துறைரீதியாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்













Click it and Unblock the Notifications