தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:பொங்கலையொட்டி தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்து உத்தரவிட்டது.
இது தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியம் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.கோபாலகிருஷ்ணன், தருண் சட்டர்ஜி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பேசுகையில்,
ஜல்லிக்கட்டின்போது விலங்குகளை பல துன்பங்களுக்கு ஆளாக்குகின்றனர். அவற்றை சாராயத்தை குடிக்க வைத்து கூட்டத்துக்குள் விரட்டுகின்றனர். அங்கு அந்த மாடுகள் மீது பாயும் கூட்டத்தினர் அதை பல வகையிலும் துன்புறுத்துகின்றனர்.
பலர் மிளகாய் பொடி போன்றவற்றை மாட்டின் கண் மீது தூவுகின்றனர். இதனால் உடல்ரீதியில் அந்த மாடு பெரும் சிரமத்தை சந்திக்கிறது. பல நேரங்களில் மாடுகள் இறந்து போவதும் உண்டு என்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சிகளில் தேவையில்லாத மனித உயிர்ப் பலிகளும் நடக்கின்றன. 2007ம் ஆண்டில் பாலமேடு (அலங்காநல்லூர்) ஜல்லிக்கட்டில் 65 பேர் படுகாயமடைந்தனர். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 35 பேர் காயமடைந்தனர். ஒருவர் பலியாகிவிட்டார் என்றும் தனது மனுவில் விலங்குகள் நல வாரியம் தெரிவித்திருந்தது.
மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் பேசுகையில், மிருகவதை தடுப்புச் சட்டத்தின்படி இதுபோன்ற ஜல்லிக்கட்டுகள் தடுக்கப்பட வேண்டும். இதற்கு தடை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தடை விதித்து தவறு செய்துவிட்டது என்றார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் ஜல்லிக்கட்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்தனர்.இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பினர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications