இங்கிலாந்தில் ஒண்டு குடித்தன ஹோட்டல்:இந்திய கிரிக்கெட் வீரர்கள் படும்பாடு
ங்கிலாந்து:இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர்கள் தங்களுக்கு தங்கும் வசதிகள் சரிவர செய்யப்படவில்லை என கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தின் மீது புகார் கூறியுள்ளனர்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணி, 2வது டெஸ்டில் விளையாட நாட்டிங்ஹாம் நகருக்கு சென்றுள்ளது.
முதல் டெஸ்டி மழை செய்த புண்ணியத்தால் டிரா ஆனதால் இந்திய அணியின் மானம் காப்பாற்றப்பட்டது. இந் நிலையில் நாட்டிங்ஹாம் நகரில் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் இந்திய அணி வீரர்கள் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட அறைகளின் அளவு 9க்கு 8 அடி என்ற திருவல்லிக்கேணி மேன்ஷன் ரூம் சைஸ் தான் இருந்ததாம்.
இதனால் அவர்களால் அறையில் உடற் பயிற்சி கூட செய்ய முடியவில்லையாம். மேலும் தங்கள் உடைமைகளைக் கூட வைக்க இடமில்லாமல் அவஸ்தைபட்டுள்ளனர்.
ரமேஷ் பவார் போன்ற சில வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகள் கிட்டத்தட்ட ஒண்டுக்குடித்தனம் போல இருந்ததாம். காற்றோட்டம் கூட இல்லையாம்.
வீரர்கள் பலரும் தங்கள் மனைவியினருடன் சென்றுள்ளதால் ரொம்பவே கஷ்டப்பட்டதாக அணியின் நிர்வாகத்தின் மீது புகார் கூறியுள்ளனர்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் சங்க செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில்,
வீரர்கள் தங்கப் போகும் ஓட்டலைப் பற்றி முழுமையாக முதலிலேயே தகவல்களை பெற்ற பின்பு தான் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது அணி நிர்வாகத்தின் தவறு.
இந்திய வீரர்களும் அளவுக்கு அதிகமாக பொருட்களை எடுத்துச் செல்வதால் சிரமங்களை ஏற்படுத்துகிறது என்றார்.
முதல்ல ஜெயிச்சுட்டு வந்து குறை சொல்லுங்க! அப்புறம் பார்ப்போம்...
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications