வாஷிங் மெஷினுக்குள் சிக்கி உயிரிழந்த குழந்தை!
கோலாலம்பூர்:மலேசியாவில் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக் கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தெரங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்த பயங்கரம் நடந்துள்ளது. அந்த வீட்டில் உள்ள அப்தில்லா அல் ஹாடி (7) என்ற சிறுவன் தனது தம்பி நஸ்ருல் ஹபீஸுடன் (14 மாதம்) விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது வீட்டில் வாஷிங் மெஷின் ஓடிக் கொண்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த ஹபீஸ், வாஷிங் மெஷினுக்கு அருகே உள்ள மாடிப் படியில் ஏறியுள்ளான்.
சில படிகள் ஏறியவுடன், அவனது கைக்கு வாஷிங் மெஷின் எட்டியுள்ளது. இதையடுத்து அதன் மேல் புற மூடியைத் திறந்து பார்த்துள்ளான். வாஷிங் மெஷினுக்குள் துணிகள் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்த அவன் அதை எடுக்க முயன்றுள்ளான்.
அந்த சமயத்தில், தவறி உள்ளே விழுந்து விட்டான் அந்தப் பச்சிளம் பாலகன். மூடி மூடிக் கொள்ள உள்ளே சிக்கிக் கொண்ட ஹபீஸ் மெஷினின் வேகத்தில் உள்ளே சுற்றியுள்ளான்.
தம்பி வாஷிங் மெஷினுக்குள் விழுந்து விட்டதைப் பார்த்த அப்தில்லா, உடனடியாக ஓடிப் போய் மெஷினை நிறுத்தி விட்டு உள்ளே சிக்கிக் கொண்ட தம்பியை வெளியே இழுத்துள்ளான்.
பிறகு மாடிப் படியில் உட்கார்ந்து கொண்டு தம்பியைத் தட்டிப் பார்த்து பெயர் சொல்லிக் கூப்பிட்டுள்ளான். அதற்குள் வீட்டில் உள்ள பெரியவர்கள் விரைந்து வந்து பார்த்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications