கீழே விழுந்து இறந்த இந்தியருக்குநஷ்ட ஈடு - துபாய் கோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
துபாய்:விளம்பர நிறுவனத்தின் விளம்ப போர்டை மாட்டிக் கொண்டிருந்தபோது தவறுதலாக கீழே விழுந்து இறந்த இந்தியத் தொழிலாளருக்கு நஷ்ட ஈடு வழங்க அந்த நிறுவனத்திற்கு துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர் ஷேசய்யா பிராங்க்ளின் (32). இவர் கடந்த 2002ம் ஆண்டு, ஜடாஃபா என்ற இடத்தில், விளம்பர நிறுவனத்தின் போர்டு ஒன்றை மாட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தவறுதலாக கீழே விழுந்து இறந்தார்.
அவரது குடும்பத்திற்கு 2 லட்சத்து 82 ஆயிரத்து 544 தினார் நஷ்ட ஈடு வழங்குமாறு உள்ளூர் நீதிமன்றம் விளம்பர நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து அந்த விளம்பர நிறுவனம் அப்பீல் செய்தது.
இதை விசாரித்த துபாய் மேல் நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, நஷ்ட ஈட்டுத் தொகையை சேஷய்யா குடும்பத்திற்கு வழங்குமாறு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications