ஹனீப் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ்!
மெல்போர்ன்:லண்டன் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய போலீசாரால் கைது செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் ஹனீப் மீதான வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படுவதாக அந் நாட்டு போலீசார் அறிவித்துள்ளது.
லண்டனில் கார் குண்டு வைத்தது மற்றும் கிளாஸ்கோ விமான நிலையத்தை தாக்கியது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ஹனீப் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார்.
![]() |
ஆனால், டாக்டர் ஹனீப்புக்கும் தீவிரவாதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய போலீசார் அவர் மீது தொடர்ந்து பல வழக்குகளை போட்டு ஜாமீனில் வர விடாமல் தடுத்தனர்.
இதையடுத்து மத்திய அரசும் பிரதமர் மன்மோகன்சிங்கும் ஆஸ்திரேலிய அரசைக் கேட்டுக் கொண்டதன் பேரில், ஹனீப் விஷயத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு அந்த நாடு தள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய போலீசார் தாங்கள் ஜோடித்த ஆவணங்களை கைவிட்டனர். இந் நிலையில் இப்போது டாக்டர் ஹனீப் மீதான அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படுவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இதனால் கடந்த 3 வார காலமாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹனீப் விடுதலையாகவுள்ளார்.
டாக்டர் ஹனீப் நிரபராதி என நிரூபிக்கப்பட்டால் ஆஸ்திரேலிய அரசு மீது மான நஷ்ட வழக்கு தொடருவோம் என்று ஹனீப்பின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மனைவி மகிழ்ச்சி:
இதன் மூலம் உண்மை வென்று விட்டதாக ஹனீப்பின் மனைவி பிர்தெளஸ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், உண்மையும் நியாயமும் வென்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. ஆனால், ஹனீப்பை நாடு கடத்தும் திட்டத்தையும் ஆஸ்திரேலியா கைவிட வேண்டும். அவர் இன்னும் 2 அல்லது மூன்று நாட்களில் பெங்களூர் வந்துவிடுவார் என நம்புகிறேன்.
பிரதமருக்கும் வெளியுறவுத்துறைக்கும் என் நன்றிகள். அதே போல ஆஸ்திரேலிய மனித உரிமை அமைப்புகளுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
வீட்டுக் காவல்:
டாக்டர் ஹனீப் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டாலும், அவருடைய விசா ரத்தாகியிருப்பதால் அவர் சிறையை விட்டு வெளியில் வந்தாலும் ஆஸ்திரேலியாவுக்குள் சுதந்திரமாக நடமாட முடியாது.
அவருக்கு மீண்டும் விசா கொடுக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் அவர் முழு சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். அவருக்கு விசா வழங்கப்படும் அல்லது அவர் நாடு கடத்தப்படுவாரா என்று தெரியவில்லை.
இந்திய அரசு கோரிக்கை:
இந் நிலையில் ரத்து செய்யப்பட்ட ஹனீப்பின் விசாவை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசுக்கு இந்தியா கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் மூலம் இக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்













Click it and Unblock the Notifications