பிரிட்டன் முருகன் கோவில் காளை சம்போவுக்குமரண தண்டனை-ஊசி போட்டு கொல்லப்பட்டது
லண்டன்:இங்கிலாந்து முருகன் கோவிலில் உள்ள சம்போ என்னும் காளையை கொல்ல பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று அந்தக் காளை ஊசி போட்டு கொல்லப்பட்டது.
இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் நகரில் பிரசித்தி பெற்ற கந்தவேல் சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள காளையின் பெயர் சம்போ. இதை பிரிட்டன் வாழ் இந்துக்கள் புனிதமாக கருதி வழிபட்டு வந்தனர்.
இந் நிலையில் சம்போவுக்கு காசநோய் ஏற்பட்டது. இதனால் அதைத் தொட்டு வணங்கும் அனைவருக்கும் டி.பி. நோய் பரவ வாய்ப்புள்ளதாகக் கூறி, அதை கொல்ல வேண்டும் எனக் கோரி இப் பகுதி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை எதிர்த்து இந்துக்கள் பலரும் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். பிரிட்டனில் வாழும் லட்சக்கணக்கான இந்து மக்கள் சம்போ காளையை புனிதமாக கருதுகின்றனர். சம்போவை கொல்வதன் மூலம் இந்துக்களின் உணர்வுகளும் கொல்லப்படும் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
![]() |
ஆனால் வழக்கை விசாரித்த பிரிட்டன் நீதிமன்றம், பிற மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் காச நோய் பரவாமல் இருக்க வேண்டுமெனில் சம்போவை கொல்வதுதான் வழி. இதில் சம்போ காளைக்கு விதிவிலக்கு அளிக்க முடியாது.
சம்போவை கொல்வதுதான் இறுதி தீர்ப்பு எனவும், இந்த தீர்ப்புக்கு எதிராக பிரிட்டன் பார்லிமெண்டின் மேல்சபையிலும் முறையிட முடியாது எனவும் தீர்ப்பளித்தனர்.
இதுகுறித்து முருகன் கோவிலைச் சேர்ந்த சூர்யானந்தா கூறுகையில்,
இந்து மத தர்மத்தின்படி முதல் கொள்கையே பிராணிகளை பாதுகாப்பது தான். இதை வலியுறுத்துவதற்கு தான் சம்போ காளையை தெய்வமாக வணங்கி வருகிறோம். ஆனால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என காரணம் காட்டி காளையை கொல்ல வேண்டும் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது இந்து மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
![]() |
சம்போ காளைக்கு முதலில் காசநோய் இருக்கிறதா என கண்டறிந்து, நோய் இருந்தால் சிகிச்சை அளிக்க வேண்டும். அதை விட்டு விட்டு காளையை கொன்று காசநோய் உள்ளதா இல்லையா என பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது தவறான செயலாகும். மனிதர்களுக்கு நோய் வந்தால், அவர்களை கொன்றா விடுகிறோம், சிகிச்சை அளிப்பது இல்லையா என்றார்.
சம்போ காளையை கொல்ல உத்தரவிட்டதற்கு பிரிட்டன் வாழ் ஹிந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.
இந் நிலையில் காளையை கொண்டு செல்ல நேற்று அதிகாரிகள் கோவிலுக்கு வந்தபோது அவர்களை பக்தர்கள் தடுத்தனர். ஆனால், அவர்களை அப்புறப்படுத்திவிட்டு காளையை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் அந்தக் காளை ஊசி போட்டு கொல்லப்பட்டுவிட்டது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்














Click it and Unblock the Notifications