தங்கபாலு ஆரம்பிக்கும் மெகா டிவி
சென்னை:தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்காக முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு புதிய தொலைக்காட்சி சேனலை ஆரம்பிக்கிறார். இதன் பெயர் மெகா டிவி.
ராஜிவ் பிறந்தநாளான ஆகஸ்ட் 20ம் தேதி முதல் இந்த சேனல் தனது ஒளிபரப்பைத் துவக்கும்.
பல கல்லூரிகளை நடத்தி வரும் தங்கபாலு சில்வர்ஸ்டார் கம்யூனிகேசன்ஸ் என்ற நிறுவனத்தை தனது மனைவி ஜெயந்தியின் பெயரில் துவக்கியுள்ளார்.
இந்த நிறுவனம் தான் தொலைக்காட்சியை நடத்தவுள்ளது.
![]() |
தொலைக்காட்சியை தொடங்குவது தங்கபாலு தான் என்றாலும் இது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்காகவே என்கிறார்.
இஸ்ரோவின் இன்சாட் 2பி செயற்கைக் கோளைத் தான் தனது ஒளிபரப்புக்கு தங்கபாலு உபயோகிக்கவுள்ளார்.
எவ்வளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரிவிக்க தங்கபாலு மறுத்துவிட்டார்.
ஆனால், தனது தொலைக்காட்சிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இருப்பதாக தங்கபாலு கூறியுள்ளார்.
இது தமிழகத்தை மையமாகக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் வளர்சிக்காக செயல்படுமாம்.
காங்கிரஸ் கட்சியை மீண்டும் தமிழகத்தில் வேரூன்ற வைக்கவும் மீண்டும் காமராஜர் ஆட்சியை மலர வைக்கவும், இளைஞர்களையும், பெண்களையும் கவரும் வண்ணம் இந்த மெகா டிவி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் தங்கபாலு.
அவர் கூறுகையில்,
மெகா டிவி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் முன்னின்று கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான வரும் ஆகஸ்ட் 20ம் தேதி தனது பிரத்தியேக ஒளிபரப்பை இந்த டிவி ஒளிபரப்பு தொடங்கவுள்ளது என்றார்.
பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைகள் இது போல டிவியை ஆரம்பிக்கும் வேலையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பில் கலைஞர் டிவி செப்டம்பர் 15ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் அதை முந்திக் கொண்டு மெகா டிவியை ஆரம்பிக்கிறார் தங்கபாலு.
தேமுதிக, மதிமுகவுக்கு மட்டும் தான் தனி சேனல்கள் இல்லை.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்













Click it and Unblock the Notifications