விழுப்புரம்: திருவிழாவில் தேர் கவிழ்ந்தது- 15 பேர் படுகாயம்
விழுப்புரம்:விழுப்புரத்தை அடுத்துள்ள ரிஷிவந்தியத்தில் நடந்த கோவில் தேர் திருவிழாவில், தேர் குடை சாய்ந்து 15 பேர் காயமடைந்தனர்.
ரிஷிவந்தியத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் கடந்த 5 ஆண்டுகளாக செப்பனிடப்பட்டு வந்தது. திருப் பணிகள்கள் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் குட முழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந் நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக கோவில் தேர் மழையிலும், வெயிலிலும் பாழ்பட்டு வந்தது. இந்தத் தேர் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இதையடுத்து பொது மக்களும், பக்தர்களும் இணைந்து தேரை செப்பனிட்டனர். தற்போது கோவிலில் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருவதை முன்னிட்டு, தேரோட்டம் நடத்தப்பட்டது. இதில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் காமராஜர் வீதியில் வந்தபோது 5 அடி ஆழ பள்ளத்தில் இறங்கியது. நிலை தடுமாறிய தேர் முன்பக்கமாக குடை சாய்ந்தது. தேர் கவிழ்வதை கண்ட பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
குடை சாய்ந்த தேர் கீழே விழாமல் மின் கம்பத்தின் வயர்களால் சாய்ந்து நின்றது. அடுத்த சில நொடிகளில் தேரின் சுமை தாங்காமல் மின்சார வயர்கள் அறுந்து மின் கம்பமும் உடைந்தது. இதனால் தேர் தரையில் சாய்ந்துவிட்டது.
இதில் கோவில் அர்ச்சகர் சோமு, கோவில் ஊழியர் ஜெயராமன் உட்பட 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications