கோவா: சபாநாயகர் உதவியோடு தப்பிய காங் அரசு
பனாஜி:கோவாவில் சபாநாயகரின் உதவியோடு இன்று திகாம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்தது. இதனால் காங்கிரஸ் அரசு தப்பியது.
கடந்த வாரம் கோவாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கொடுத்த ஆதரவை திடீரென 2 எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றனர். அதே போல காங்கிரஸ் எம்எல்ஏ விக்டோரியாவும் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவை ஆதரிக்கப் போவதாக அறிவித்தார்.
ஆட்சி அமைத்த 49 நாளிலேயே ஆதரவு எம்எல்ஏக்கள் விலகியது கோவா அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விலகிய எம்எல்ஏக்கள் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவுக்கு ஆதரவு அளிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் திகாம்பர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.
அவர் பதவி விலகவேண்டும் இல்லையெனில் சட்டசபையில் தனது கூட்டணி சார்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பாஜக கோரியது.
திகாம்பரை காப்பாற்ற கோவா மாநில கவர்னர் ஜமீர் முயன்றார். ஆனால், ஜனாதிபதி பாட்டீலை சந்தித்த பாஜக தலைவர்கள தங்களுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களை அணி வகத்துக் காட்டினர்.
இதையடுத்து தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு திகாம்பருக்கு உத்தரவிடப்பட்டது.
இந் நிலையில் இன்று சட்டசபையில் திகாம்பர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
ஆனால், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள சபாநாயகரின் உதவியோடு காங்கிரஸ் பெரும் அரசியல் சர்க்கசில் ஈடுபட்டது.
முதலில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விக்டோரியா பெர்னான்டஸ் வாக்களிக்க தடை விதித்தார் சபாநாயகர்.
அதே போல காங்கிரஸ் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற மகாராஷ்டிர கோமந்தக் கட்சியின் இரு எம்எல்ஏக்களுக்கும் வாக்களிக்க முடியாது என தடை விதித்தார்.
இவர்களது வாக்குகளை நம்பித்தான் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டிருந்தது.
இந் நிலையில் சபாநாயகரின் தடை இவர்களை வாக்களிக்க விடாமல் செய்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான ஓட்டெடுப்பிலேயே கலந்து கொள்ளாமல் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.
இதனையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் தனது பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் திகாம்பர் காமத்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications