கைதியிடம் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கி தப்பவிட்ட ஏட்டு கைது
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான கைதியை தப்ப விடுவதற்காக அவரிடமிருந்து ரூ. 15 லட்சம் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் கடந்த ஆண்டு போதைப் பொருள் கடத்தியதாக சென்னையில் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த 14ம் தேதி புழல் மத்திய சிறையிலிருந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட 20 கைதிகளுடன் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
சிகிச்சை முடிந்து கைதிகள் வெளியே கொண்டு வரப்படும்போது சுந்தரராஜன் தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக பூக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில், சுந்தரராஜன் தப்பியதில் பெரும் சதி அடங்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவர்களின் விசாரணையில் கைதிகளுக்குப் பாதுகாப்பாக வந்த தலைமைக் காவலர் ராஜுதான் சுந்தரராஜன் தப்ப காரணம் எனத் தெரிய வந்தது. சுந்தரராஜன் சிறையில் இருந்தபோது அவரை பத்துக்கும் மேற்பட்ட முறை சாதாரண பார்வையாளர் போல ராஜு பார்த்துப் பேசியுள்ளார். அப்போதுதான் தப்பி ஓடுவதற்கான திட்டத்தை ராஜு, சுந்தரராஜனுக்கு வகுத்துக் கொடுத்துள்ளார்.
சுந்தரராஜனை தப்ப விடுவதற்காக அவரிடமிருந்து ரூ. 15 லட்சம் பணத்தையும் லஞ்சமாக வாங்கியுள்ளார். மொத்தம் ரூ. 50 லட்சம் பேரம் பேசப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக 15 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார் ராஜு. இதையடுத்து ராஜுவை போலீஸார் கைது செய்தனர்.
ராஜு கைதிகளைத் தப்ப விடுவது இது முதல் முறையல்ல, 3வது முறை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே 2 முறை அவர் கைதிகளைத் தப்ப விட்டு சஸ்பெண்ட் ஆகியுள்ளார். கடந்த 22 வருடங்களாக ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார் ராஜு. கைதிகளை கோர்ட்டுக்கும், மருத்துவமனைக்கும் கொண்டு செல்லும் பணியில் இவர்தான் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.
இதைப் பயன்படுத்தித்தான் கைதிகளை தப்ப விட்டு பணம் பார்த்து வந்துள்ளார் ராஜு. தப்பி ஓடிய சுந்தரராஜனைப் பிடிப்பதற்கும், அவரிடமிருந்து ராஜு லஞ்சமாக வாங்கிய பணத்தைப் பறிமுதல் செய்வதற்கும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுந்தரராஜனிடமிருந்த வாங்கிய பணத்தை படு தெளிவாக தனது பெயரிலோ அல்லது குடும்பத்தினர் பெயரிலோ வங்கியில் வைத்துக் கொள்ளவில்லை ராஜு என்று கூறப்படுகிறது. இதனால் அவர் வாங்கிய பணத்தை எங்கு பதுக்கியுள்ளார் என்று தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications