காதல் தகராறு-இரு சமூகத்தினர் பயங்கர மோதல்ஒருவர் கொலை: திமுக புள்ளி எஸ்கேப்
திருச்சி:திருச்சி அருகே காதல் விவகாரத்தில் இரு சமூகத்தினர் இடையே நடந்த மோதலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரும் பெண்ணும் காதலித்ததால் இந்தப் பிரச்சனை வெடித்தது.
இது தொடர்பாக திருச்சி புறநகரான சோமரசம்பேட்டையில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே தகராறு இருந்து வந்தது. இந் நிலையில் புருஷோத்தமன் என்ற வாலிபர் எதிர்தரப்பினரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்தச் செய்தி பரவியதும் எதிர் தரப்பினர் பயங்கர ஆயுதங்களும் இன்னொரு சமூகத்தினரை தாக்க ஆரம்பித்தனர். இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டதோடு அப் பகுதியின் வீடுகள், கடைகள், வாகனங்களையும் சூறையாடினர்.
இத் தாக்குதலாலும் கல்வீச்சிலும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரையும் இரு தரப்பினரும் தாக்கினர். இதில் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சில போசாரும் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து கூடுதல் எஸ்பி சந்திரசேகர் தலைமையில் ஆயுதப் படையினர் அங்கு விரைந்து வந்து கும்பலை அடித்து விரட்டி கலையச் செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து நிலைமை பதற்றமாக இருக்கவே திருச்சி மண்டல வருவாய் கோட்ட அதிகாரி ராமன் இரு தரப்பினருடனும் சமரச பேச்சு நடத்தினார்.
இந்த வன்முறை தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைக்கு முக்கிய காரணமாக இருந்தவராகக் கருதப்படும் சோமரசம்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் பழனியாண்டி தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மோதல் தொடராமல் தடுக்க அங்கு ஆயுதப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications