ஆக.15 முதல் தபால் அலுவலகங்களில் ரயில் டிக்கெட்
டெல்லி:ஆகஸ்ட் 15ம் தேதியிலிருந்து தபால் நிலையங்களில் ரயில்வே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம்.
இதற்கான ஒப்பந்தத்தில் இன்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ராஜா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அப்போது லாலு கூறுகையில்,
முதல் கட்டமாக நாட்டில் பல்வேறு நகரங்களில் உள்ள 32 தபால் அலுவலகங்களில் இத் திட்டம் அமல்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
தபால் அலுவலம் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு ரூ.15 முதல் ரூ.30 வரை சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படும்.
2ம் வகுப்பு படுக்கை மற்றும் அமரும் வசதியுள்ள டிக்கெட்டை முன்பதிவு செய்தால் டிக்கெட்டிற்கு ரூ.15ம், மூன்றாம் வகுப்பு ஏசி மற்றும் உட்காரும் வசதியுள்ள ஏசி டிக்கெட்டிற்கு ரூ.20ம், முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி டிக்கெட் முன்பதிவு செய்ய ரூ.30ம் சர்வீஸ் தொகையாக வசூலிக்கப்படும்.
பயணச்சீட்டை கேன்சல் செய்தால் ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இத் திட்டம் தமிழ்நாடு, ஒரிஸ்ஸா அஸ்ஸாம், மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, குஜராத், பீகார், உத்தரபிரதேசம், டெல்லி, ஜார்கண்ட், மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் முதல்கட்டமாக அமல்படுத்தப்படுகிறது.
தபால் அலுவலகங்களில் அனைத்து வகையான டிக்கெட்டுகளும் தரப்படும். ராணுவ வீரர்களுக்கான வெளச்சர் மற்றும் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தபால் அலுவலகங்கள் மூலம் டிக்கெட் பெற்றுக் கொள்ளாலாம் என்றார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications