அல்உம்மா கைதிக்கு செல்போன்- 2 பேர் கைது
திருநெல்வேலி:பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அல் உம்மா கைதி, பேசுவற்காக நீதிமன்றக் கழிவறையில் செல்போன் வைத்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் உள்ளிட்டவை சப்ளை செய்யப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி செல்போன்கள், கஞ்சா உள்ளிட்டவைகளை கைப்பற்றி வருகின்றனர்.
மேலும் அங்கு அடைக்கப்பட்டிருக்கும் அல் உம்மா கைதிகளுக்கு செல்போன் வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 20 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில் மேலப்பாளையத்தில் 3 பேரை படுகொலை செய்த வழக்கில் கைதான அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த ரசூல் மைதீன் என்பவரை, வேறு ஒரு வழக்கில் நெல்லை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்தனர்.
அப்போது சிறுநீர் வருவதாக மைதீன் கூறியுள்ளார். இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு போலீஸார் அழைத்துச் ெசன்றனர்.
முன்னெச்சரிக்கையாக போலீசார் கழிப்பறைக்குள் சென்று பார்த்த போது அங்கு ஒரு செல்போன் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு போலீஸார் தகவல் கொடுத்தனர்.
அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் சிறைச்சாலையில் செல்போன் கெடுபிடி அதிகரித்துள்ளதால் கழிவறையில் வைத்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தது தெரிய வந்தது.
இந்த கழிவறை செல்போன் வசதியை ஏற்படுத்தியது மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஷாலின், முகமது இஸ்மாயில் ஆகியோர்தான் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கோவை குண்டு வெடிப்பில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் அல் உம்மா கைதி பேசுவதற்கு கழிவறையில் செல்போன் வைத்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குண்டு வெடிப்பில் இன்று தீர்ப்பு வெளியான நிலையில் அல் உம்மா கைதி பேசுவதற்கு கழிவறையில் செல்போன் வைத்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications