சந்தனக் கூடு: சமரசம் பேச வந்தஇடத்தில் சரமாரி கத்திக் குத்து
மதுரை:சந்தனக் கூடு விழாவை நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையைப் பேசித் தீர்க்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த இரு பிரிவினரிடையே பெரும் மோதல் மூண்டது. இதில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
மதுரை நரிமேட்டில் ஒரு தர்கா உள்ளது. இந்த தர்காவின் ஜமாத் அலுவலகம் கோரிப்பாளையம் பகுதியில் உள்ளது. இந்த ஜமாத்துக்கு சமபத்தில் புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிர்வாகிகள் தேர்வுக்கு ஏற்னவே நிர்வாகியாக இருந்த அப்துல் ரகீம் என்பவரும் அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சந்தனக் கூடு விழா நடத்துவது குறித்து ஜமாத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதற்கு ரகீம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களையும் கலக்காமல் விழா நடத்தக் கூடாது என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி விழாவை அமைதியாக நடத்துவதற்காக சமரசப் பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. மதுரை வடக்கு தாசில்தார் அலுவலகத்திற்கு இரு தரப்பினரும் நேற்று அழைக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து இரு தரப்பினரும் தாசில்தார் அலுவலகம் உள்ள மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் அவர்கள் வந்தபோது தாசில்தார் அங்கு இல்லை. வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தார்.
தாசில்தாருக்காக இரு பிரிவினரும் காத்திருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு மூண்டுள்ளது.இதையடுத்து இரு தரப்பினரும் கற்களை வீசியும், சரமாரியாக அடித்துக் கொண்டும் மோதலில் இறங்கினர்.
அப்போது நாகூர் மீரான் என்பவரை இன்னொரு தரப்பு கத்தியால் குத்தி விட்டது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரும் அமைதிப்படுத்தினர். குத்துப்பட்ட மீரான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரைக் கத்தியால் குத்தியதாக கூறப்படும் இருவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications