ஏ.டி.எம் கார்டுகளுக்கு சர்வீஸ் சார்ஜ்வங்கிகள் முடிவு - கஸ்டமர்களுக்கு புது சிக்கல்!
டெல்லி: ஒரே மாதத்தில் ஆறு முறைக்கு மேல் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தினால், அதற்கு சர்வீஸ் சார்ஜ் செலுத்த வேண்டும் என வஙகிகள் முடிவு செய்துள்ளன. இதனால் டெபிட் கார்டு வைத்திருப்போர் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
முன்பெல்லாம் நமது வங்கிக் கணக்கில் உள்ள 10 ரூபாயை எடுப்பதாக இருந்தாலும் கூட வங்கிக்குச் சென்று டோக்கண் வாங்கிக் கொண்டு நீண்ட நேரம் காத்திருந்து பின்னர்தான் பணத்தை வாங்கிச் செல்ல முடியும்.
ஆனால் ஏடிஎம் எனப்படும் எனி டைம் டெல்லர் மெஷின் முறை வந்த பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. ஒரே நேரத்தில், சில விநாடிகளில் 50 ஆயிரம் ரூபாய் வரை கூட எடுக்க முடியும் என்ற நிலை உருவானது.
இப்போதெல்லாம் ஏடிஎம் கார்டு எனப்படும் டெபிட் கார்டுகள் வைத்திராத நபர்களே இல்லை எனும் அளவுக்கு அனைவரிடமும் கார்டுகள் உள்ளன. வங்கிகளில் போய் கால் கடுக்க காத்திருந்த பணம் எடுப்பதற்குப் பதில் இப்போது சொடுக்கு போடும் நேரத்தில் பணத்தை சுலபமாக எடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஏடிஎம் கார்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 99 சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படுகிறது. இப்போது இதற்கு ஆப்பு வந்து விட்டது. ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்துவோருக்கு வங்கிகள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளன.
அதாவது, இனிமேல் மாதத்திற்கு 6 முறைதான் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முடியுமாம். அதற்கு மேல் எத்தனை முறை நீங்கள் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கிறீர்களோ, ஒவ்வொரு முறையும் தலா 15 ரூபாயை உங்களது கணக்கிலிருந்து வங்கி பிடித்தக் கொள்ளும். அதாவது அது சர்வீஸ் சார்ஜாம்.
இந்த புதிய முறையை அனைத்து வங்கிகளும் அமல்படுத்த முடிவு செய்துள்ளன. இருப்பினும், சேவை கட்டண விதிப்பு எதுவாக இருந்தாலும் முதலிலேயே வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி அறிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறையில் உள்ளது.
எனவே புதிய கட்டண முறை குறித்து வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி அறிவித்து, குறிப்பிட்ட கால அவகாசம் அளித்த பிறகே அமலுக்கு வரப்படும் என வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்டுப்பாடு குறித்து அரசு வங்கியின் முன்னணி அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த முறை அமல் படுத்தப்பட்டால், வாடிக்கையாளர்கள் பெரும்பாலும், ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர் செய்வதை உபயோகப்படுத்துவர். ஏனெனில் அதற்கு கட்டணம் கிடையாது.
அதேபோல் டெபிட் கார்டைப் பயன்படுத்தி கடைகளில் பொருட்கள் வாங்குவதும் இனி அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
முன்பு இப்படித்தான் நமது பணத்திலிருந்து ஒரே நேரத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், வரி விதிக்கப்படும் என முன்பு ப.சிதம்பரம் அறிவித்தார். ஆனால் மக்களிடையே அதற்கு கடும் கொந்தளிப்பு எழுந்தது. பின்னர் இந்த அளவு ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இப்போது ஏடிஎம் கார்டுகளுக்கு ஆப்பு வைக்க கிளம்பியுள்ளனர். இதை மக்கள் எப்படி எதிர்க்கப் போகிறார்களோ?
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications