45 நாள் குழந்தைக்கு பான் கார்டு!
சென்னை:பிறந்து 45 நாட்ளே ஆன குழந்தைக்கு வருமான வரித்துறை பான் கார்டு வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே மிகவும் இளம் வயதில் பான் கார்டு பெற்றவர் என்ற பெருமையும் இந்தக் குழந்தைக்குக் கிடைத்துள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில், மும்பையைச் சேர்ந்த கிரிஷி என்கிற பிறந்து 56 நாளே ஆன குழந்தைக்குப் பான் கார்டு வழங்கப்பட்ட செய்தியைப் படித்தார் பாலமுருகன்.
இதையடுத்து தனது குழந்தைக்கும் பான் கார்டு வாங்க தீர்மானித்தார். ஜூன் 20ம் தேதி பிறந்த இவரது குழந்தை ஆர்.பி. அக்ஷிதா பிறந்து 45 நாட்கள்தான் ஆகிறது. விண்ணப்பித்தவுடன் அக்ஷிதாவுக்கு பான் கார்டு கிடைத்தது. நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் பாலமுருகனிடம் பான் கார்டை வழங்கினர்.
கிருஷியின் சாதனையை முறியடிக்கும் விதமாகவே தனது மகள் பெயரில் பான் கார்டு வாங்கியுள்ளதாக கூறுகிறார் பாலமுருகன்.
இந்தியாவிலேயே இளம் வயதில் பான் கார்டு வாங்கியுள்ள பெருமை அக்ஷிதாவுக்குக் கிடைத்துள்ளது. முன்பு ஒரிசாவைச் சேர்ந்த 3 வயதுக் குழந்தைக்கு பான் கார்டு கொடுக்கப்பட்டது. மிகவும் இளம் வயதில் முதன் முதலில் பான் கார்டு வாங்கிய குழந்தை இதுதான்.
பான் கார்டு வாங்கியதோடு நில்லாமல், தனது குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு ஒன்றையும் ஆரம்பித்துள்ளார் பாலமுருகன். பான் கார்டு வாங்கி விட்டதால் தனது மகள் பெயரில் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யவுள்ளாராம் பாலமுருகன்.
இத்தனை இளம் வயதில் பான் கார்டு வழங்கப்படுவது குறித்து வருமான வரித்துறையினர் கூறுகையில், பான் கார்டை யார் வேண்டுமானாலும் பெறலாம். தங்களது குழந்தைகள் பெயரில் முதலீடு செய்ய விரும்புவோர் இந்த கார்டை பெறலாம் என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications