டிஐஜி தூக்குப் போட்டுத் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:பெங்களூர் மத்திய சிறைத்துறை டிஐஜி ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூர் புறநகர்ப் பகுதியான பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை உள்ளது. இங்கு டிஐஜியாக இருந்தவர் அப்பாயி. சிறை வளாகத்திலேயே இவரது வீடு உள்ளது.
![]() |
நேற்று காலை பணிக்கு வந்த அப்பாயி, மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்குச் சென்றார். இந்த நிலையில் தனது வீட்டில் அப்பாயி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாலை வரை அப்பாயி பணிக்குத் திரும்பாததால் ஒரு காவலர் வீட்டுக்கு வந்துல்ளார். அப்போது சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தபோதுதான் அப்பாயி தற்கொலை செய்து கொண்ட விவரம் தெரிய வந்தது.
எதற்காக அப்பாயி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.













Click it and Unblock the Notifications