காவிரியில் கர்நாடகம் புதிய தடுப்பணை: தடுக்ககோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு
டெல்லி:காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு முரணாக, காவிரி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள், நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆகியவற்றை கர்நாடக அரசு செயல்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில்,
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பதும், புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமலாக்க முயற்சிப்பதும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மீறும் செயலாகும்.
1991ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடகம் தடுப்பணைகள் கட்டினால், புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமல்படுத்தினால் தமிழகத்தின் பங்கு நீர் தடைப்படும்.
தற்போபாது காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பதாகத் தெரிகிறது. மேலும், காவிரிப் பாசனப் பகுதியில் உள்ள சிறு குளங்களை தூர்வாரும் நடவடிக்கையிலும் கர்நாடக அரசு ஈடுபடவுள்ளது. இதன் மூலம் காவிரியிலிருந்து அதிக நீரை அவர்கள் எடுக்கும் வாய்ப்பு ஏற்படும்.
மேலும், தங்களது பகுதியின் கீழ் உள்ள பாசனப் பகுதியை அதிகரிக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இவையெல்லாம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு முரண்பாடானதாகும். எனவே இந்த செயல்களில் கர்நாடகம் ஈடுபடக் கூடாது என்று கர்நாடக அரசுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications