டாடா ஆலை-மக்களிடம் கருத்து கேட்ட விஜயகாந்த்
நெல்லை:நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமையவிருக்கும் டாடா தொழிற்சாலை குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்க அப் பகுதியில் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் டாடா நிறுவனம் டைட்டானியம் தொழிற்சாலையை அமைக்க கடந்த மாதம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது.
ஆனால், இதற்கு பல கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மக்களிடையே எதிர்ப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் மக்களிடம் கருத்துக் கேட்கும் பணியில் பல கட்சிகளின் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறார்.
சாத்தான்குளம் வந்த அவர் டாடா தொழிற்சாலை அமையவிருக்கும் பகுதி மக்களை சந்தித்து கருத்து கேட்டார்.
பின்னர் நெல்லை மாவட்டம் குட்டம் பகுதி மக்களை அவர் சந்தித்தார்.
இதையடுத்து அறிக்கை தயார் செய்து முதல்வர் கருணாநிதியிடம் விஜயகாந்த் கொடுப்பார் எனத் தெரிகிறது.
இதற்கிடையே பொது மக்களிடம் கருத்துக் கேட்க சாத்தான்குளத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் நாளை வரவுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications