அணியில் சேர்க்காவிட்டால் இந்திய கிரிக்கெட்லீக்கில் சேருவேன்: இன்சமாம் மிரட்டல்
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் என்னை சேர்க்கவில்லையெனில் நான் இந்திய லீக் அமைப்பில் போய் சேர்ந்துவிடுவேன் என கிரிக்கெட் வீரர் இன்சமாம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜீ டிவியின் அதிபர் நரேஷ் சந்திரா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவுடன் இணைந்து இந்திய லீக் என்ற கிரிக்கெட் அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐக்கு இது அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது.
![]() |
பிசிசிஐயின் எச்சரிக்கையையும் மீறி இந்த லீக்கில் விளையாட இந்தியா உள்பட பல நாட்டு முன்னணி வீரர்களும் முன்வந்துள்ளனர்.
இதனால் கபில்தேவை பிசிசிஐ தலைவரும் அமைச்சருமான சரத் பவார் காட்டமாக விமர்சிக்க, பதிலுக்கு கபிலும் பேட்டி தந்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை விட இந்த சண்டை மிக சுவாரஸ்யமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம், இந்திய லீக் அமைப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் யாரும் சேரக்கூடாது என திடீரென கட்டுப்பாடு விதித்தது.
இது குறித்து இன்சமாம் கூறுகையில்,
கிரிக்கெட் என்பது திறந்த வெளிச் சந்தை மாதிரியானது. வீரர்களான நாங்கள் எங்கு சென்று விளையாடவும் எங்களுக்கு உரிமை உண்டு. எங்களை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.
என்னை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்காவிட்டால் நான் இந்தியாவில் உள்ள இந்திய லீக் அமைப்பிலோ அல்லது வங்காள தேசத்திற்கோ சென்று விளையாடுவேன்.
இதை நான் பணம் சம்பாதிக்கும் ஆசைக்காக சொல்லவில்லை. கிரிக்கெட் அணியில் சேர்க்காதபோது எங்களை ஏன் அவர்கள் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு அதிகாரமே கிடையாது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்













Click it and Unblock the Notifications