அசாமில் மீண்டும் வெறித்தனம்இந்தி பேசும் 14 பேர் படுகொலை
குவஹாத்தி:அசாமில், தீவிரவாதிகள் மீண்டும் இந்தி பேசுவோரைக் குறி வைத்து வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். கர்பி அங்லோங் மாவட்டத்தில் இந்தி பேசும் 14 பேர் வெறித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 6 பேர் குழந்தைகள்.
கர்பி அங்லோங் மாவட்டம், டோலாமர் கிராமத்தில் இந்தி பேசுவோர் அதிக அளவில் உள்ளனர். அங்கு நேற்று இரவு உல்பா தீவிரவாதிகள் திபுதிபுவென புகுந்தனர். பின்னர் இந்தி மொழி பேசும் நான்கு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை வீட்டுக்குள்ளிலிருந்து வெளியே இழுத்து வந்தனர்.
பின்னர் அவர்களை வரிசையாக நிறுத்தி கண்மூடித்தனமாக வெறித்தனமாக சுட்டனர். பின்னர் அவர்களின் குடிசைகளையும் தீவைத்துக் கொளுத்தினர்.
இந்த கொடூர சம்பவத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வெறிச் செயலுக்கு கர்பி லோங்க்ரி தேசிய விடுதலை முன்னணி என்ற தீவிரவாத அமைப்புதான் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த 8ம் தேதி இதே மாவட்டத்திற்குட்பட்ட ஹவ்ராகாட் என்ற இடத்தில் இந்தி பேசும் 8 பேர் கொலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
சில மாதங்களுக்கு முன்பு இந்தி பேசுவோரை உல்பா தீவிரவாதிகள் கொன்று குவித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் இந்தி பேசுவோரை தீவிரவாதிகள் கொன்றுள்ளது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications