தடைகளைத் தாண்டி மக்கள் ஆதரவுடன்வெற்றி பெறுவோம்: கருணாநிதி
சென்னை:மக்களுக்கு நலன் பயக்கும் திட்டங்களுக்கு சிலர் தெரிவித்து வரும் எதிர்ப்புகள், இடையூறுகளுக்கு நானோ எனது அரசோ பயப்பட மாட்டோம். மாறாக, அவற்றை மக்கள் ஆதரவுடன் தகர்த்து வெற்றிகரமாக திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அடையாறு முகத்துவாரப் பகுதியில் ரூ. 100 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.
நிகழ்ச்சியில், கருணாநிதி பேசுகையில், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கிறார்கள். ஆனால் நானோ எனது அரசோ, திமுகவோ இதைக் கண்டு அஞ்ச மாட்டோம். இந்த இடையூறுகளைத் தாண்டி மக்கள் ஆதரவுடன் அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவோம்.
பிற மாநிலங்களை விட தமிழகம் தொழில்துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால் இதை விரும்பாத சிலர் அரசின் நலத் திட்டங்களுக்கு, மக்கள் நலத் திட்டங்களுக்கு இடையூறு செய்தவண்ணம் உள்ளனர். அரசு மீது எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள்.
இத்தகைய திட்டங்களை நிறுத்தக் கோரி நீதிமன்றங்களையும் நாடுகிறார்கள். இந்த அடையாறு பூங்கா திட்டத்தையும் கூட சிலர் எதிர்க்கிறார்கள். நீதிமன்றத்தையும் அணுகினர்.
அரசு கொண்டு வரும் நலத் திட்டங்கள் எனக்கோ அல்லது எனது குடும்பத்துக்கோ அல்லது திமுகவுக்காக கொண்டு வரப்படுபவை அல்ல. தொலைதூரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கருப்பன், முத்து, கந்தன், கடம்பன் போன்ற சாமானியர்களுக்கான திட்டங்கள் அவை.
மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக எனது வாழ்க்கையை கூட அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறேன். இது போன்ற எதிர்ப்புகளை சமாளித்து, எப்படி வெற்றி காண்பது என்பது குறித்த பாடங்களையும், உத்திகளையும் எனது அரசியல் ஆசான்களிடமிருந்து நிறையவே கற்றுள்ளேன்.
எனது வேண்டுகோள் எல்லாம், மக்கள் இந்தத் திட்டங்களைப் புரிந்து கொண்டு, அரசின் நல்லெண்ணத்தை தெரிந்து கொண்டு அவற்றுக்கு முழு ஆதரவு தர வேண்டும் என்றார் கருணாநிதி.
350 ஏக்கரில் அமையவுள்ள அடையாறு பூங்கா, 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், சென்னை மேயர் மா.சுப்ரமணியம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications