சஞ்சய் தத் ஜாமீன் மனு-சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:மும்பை குண்டுவெடிப்பில் தண்டணை பெற்ற சஞ்சய் தத் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கடந்த வாரம் கொடுக்கப்பட்டது.
தண்டனை பெற்ற சஞ்சய்தத் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இது தொடர்பாக சிபிஐ விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications