அரபு நாடுகளில் இனி இந்தியப் பணிப்பெண்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 400 டாலர்
துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணியாற்றும் இந்தியப் பணிப் பெண்களுக்கு குறைந்தபட்சம் 400 டாலர் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது அமலுக்கு வரவுள்ளது.
இதுகுறித்து துபாயில் உள்ள இந்திய தூதர் வேணு ராஜாமணி கூறுகையில், இதுகுறித்த முறையான அறிவிப்பு எதுவும் எங்களுக்கு இதுவரை வரவில்லை. ஆனால் இப்படி ஒரு திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது என்பது மட்டும் தெரியும்.
இந்தியப் பணிப் பெண்களை அரபு நாடுகளில் வேலைக்கு எடுப்பதற்கான வழி முறைகளும் கூட வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இன்னும் சட்டப்பூர்வ வடிவம் பெறவில்லை. இருப்பினும் செப்டம்பர் 1ம் தேதி முதல் இவை அமலுக்கு வரக் கூடும் எனத் தெரிகிறது என்றார்.
மத்திய அரசு சமீபத்தில் இந்தியப் பணிப்பெண்கள் நலன் குறித்த சில முக்கிய முடிவுகளை எடுத்தது. அதன்படி, இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்கு பெண்களை எடுப்போர் அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 400 டாலர் (அதாவது தோராயமாக 1468 தினார்) சம்பளாக தர வேண்டும்.
அவர்களுக்கு பிரீ பெய்டு மொபைல் இணைப்பும் இலவசமாக தரப்பட வேண்டும். இதன் மூலம் அந்தப் பணிப்பெண்களை இந்தியத் தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வர முடியும். அவர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் அணுக முடியும். அவர்கள் மீதான குற்றங்களை தடுக்கவும் இது வழி செய்யும்.
அரபு நாடுளில் அதிகம் வேலை பார்ப்பவர்கள் இந்தியர்கள் மற்றும் பிலிப்பைஸன் நாட்டவர்கள்தான். பிலிப்பைன்ஸில் உள்ளதைப் போல இந்தியத் தொழிலாளர்களை நான்கு வகைகளாக அதாவது ஆயாக்கள் (பணிப்பெண்கள்), பட்லர்கள், சமையல்காரர்கள், டிரைவர்கள் என மத்திய அரசு நான்கு வகையாக பிரித்துள்ளது. பிலிப்பைன்ஸ் அரசுடன் கலந்து ஆலோசித்த பின்னர் இந்திய பணிப்பெண்கள் குறித்த பல முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
இந்தியத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக சமீபத்தில் மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி பிலிப்பைன்ஸ் சென்றிருந்தார்.
இந்த நடவடிக்கைகள் குறித்து ராஜாமணி கூறுகையில், இந்தியத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதிலிருந்தும், துன்புறுத்தப் படுவதிலிருந்தும் தடுக்கும் முகமாகவே இந்த சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்றார்.
மேலும் 30 வயதுக்குட்பட்ட இந்தியப் பெண்களை அரபு நாடுகளில் பணிப்பெண்களாக அமர்த்த வேண்டுமானால் இந்திய குடியேற்றத்துறையின் சான்றிதழ் பெற வேண்டும். மற்றவர்களுக்கு அது தேவையில்லை.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications