ஆதரவை வாபஸ் பெற தைரியம் உண்டா?இடதுசாரிகளுக்கு பிரதமர் பதிலடி
டெல்லி:இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால் பதவியை விட்டு விலகத் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.
இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் என பாஜகவும், மத்திய அரசை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன. மேலும் மூன்றாவது அணியும் கடுமையாக எதிர்க்கிறது.
இதனால் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் தனிமைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்து பாஜக, மூன்றாவது அணியுடன் சேர்ந்து கொண்டு இடதுசாரிகளும் நாடாளுமன்றத்தில் பிரச்சனை கிளப்பவுள்ளனர்.
மேலும் இந்த ஒப்பந்தத்தின் மீது நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என 184வது பிரிவின் கீழ் பாஜக கோரவுள்ளது. ஆனால், இடதுசாரிகளின் ஆதரவு இல்லாத நிலையில் ஓட்டெப்பு நடத்தினால் பாஜக-3வது அணி கூட்டணி தான் வெல்லும்.
இதனால் அரசே கவிழும் நிலை உருவாகும். இதையடுத்து ஓட்டெப்பு நடத்துவதில்லை, வெறும் விவாதம் மட்டுமே நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந் நிலையில் இடதுசாரிகள் தன்னை முதுகில் குத்திவிட்டதாக வருத்தம் அடைந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக தன்னை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பர்தானிடம் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
மேலும் வேண்டுமானால் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் சிங் கூறியுள்ளார்.
ஆனால், இதை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா மறுத்துள்ளார். பிரதமர் அப்படியெல்லாம் கூறவில்லை என்ற அவர், எங்களது எதிர்ப்பு நிலையிலும் மாற்றமில்லை என்றார்.
இதனால் பாஜக நெருக்கடியால் இந்த ஒப்பந்தத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தால் இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துவிடும் என்று கூறப்படுகிறது.தெரிகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications