நாளை சோனியா வருகை-மதுரையில் தீவிர பாதுகாப்ப
மதுரை:நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மானாமதுரை-ராமேசுவரம் அகல ரயில் பாதையை துவங்கி வைக்க மதுரைக்கு வருவதையொட்டி நகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் நடக்கவிருந்த இந்த நிகழ்ச்சி மதுரைக்கு மாற்றப்பட்டது. நாளைய தினம் ஆடி அமாவாசை என்பதால், ராமேஸ்வரத்தில் அதிக பக்தர்கள் கூடுவார்கள். இதனால் சோனியாவுக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் உருவாகும் என்பதால் நிகழ்ச்சி மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடக்கும் இந் நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் அகல ரயில் பாதையை சோனியா திறந்து வைக்கிறார். இதனால் மதுரை முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து வாகனங்களும் சோதனைக்குப் பின்பே மதுரை நகருக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது.
வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் குழுவினர் மருத்துவக் கல்லூரி வளாகத்தை தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். தேசிய பாதுகாப்பு படையின் கமாண்டோக்கள் இன்று காலை நிகழ்ச்சி நடக்கும் இடத்தை பார்வையிட்டனர். மேலும் ஹெலிகாப்டர்களும் வான்வழி கண்காணிப்பில் ஈடுபடவுள்ளன.
இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி, ரயில்வே அமைச்சர் லாலு, அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications