செங்கோட்டை அணையில் லீக்: கட்டி 3ஆண்டுகளே ஆகின்றன-செலவு ரூ.62 கோடி!
செங்கோட்டை:செங்கோட்டை அருகே மேக்கரையில் ரூ. 62 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடவி நயினார் கோவில் அணைக்கட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த அணையின் மூலம் சுமார் 7,000 ஹெக்டேர் நிலம் நீர் பாசனம் பெற்று வருகிறது.
இந்த அணையின் முலம் கரிசல் மடை வழியாக வடகரை, மேல்பிடாகை, பண்பொழி, கணக்கப்பிள்ளை வலசை, குத்துக்கல் வலசை, சீவநல்லூர், இலத்தூர், சிவராமபேட்டை, நயினாகரம், இடைகால், ஆய்க்குடி, நெடுவயல், அச்சன்புதூர் ஆகிய 12 கிராமங்களும்,
![]() |
மேட்டுகால் பாசானம் வழியாக வடகரை, கீழ்பிடாகை, அச்சன்புதூர் ஆகிய இரண்டு கிராமங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த அணை கட்டப்பட்டு 3 ஆண்டுகள் தான் ஆகின்றன.
இந் நிலையில் அணை முழுவதும் தண்ணீர் கசிந்து வருகிறது. அணையும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
இந்த அணையின் மேல் தளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஏணியின் அருகே அணையின் அடிபகுதியில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வந்து கொண்டுள்ளது.
இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் அணையின் கோட்ட செயற்பொறியாளரிடமும் முறையிடப்பட்டாலும் ஒரு பலனும் ஏற்படவில்லை.
மேற்படி துளைகள் பெரிதானால் தண்ணீர் வீணாகி பாசானத்திற்கு பயன்படாமல் போகலாம்.
இதனால் இப் பகுதி விவசாயிகள் பாதிக்கப்படலாம்.
அணையை இவ்வளவு தரக் குறைவாகக் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி மறியல் போராட்டத்தில் குதிப்போம் என வடகரை சி.பி.ஐ கட்சி கிளைச் செயலாளர் எஸ்.டி.சேக் மைதீன் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் எச்சரித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications