ஈசிஆர் பங்களாவில் ரெய்ட்: அழகியுடன்ஓடிய எஸ்ஐ- 3 நடிகைகளும் தப்பினர்
சென்னை:சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு பங்களாவில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு போலீஸார் ரெய்ட் நடத்தினர். அப்போது, அழகியுடன் உல்லாசமாக இருந்த சப் இன்ஸ்பெக்டர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
ஒரு காலத்தில் அழகிய கடற்கரையுடன் அமைதியாக காணப்பட்டது கிழக்குக் கடற்கரைச் சாலை. பல முக்கியப் புள்ளிகள் இந்த பகுதியின் அமைதி பிடித்துப் போக இடங்களை வாங்கி பெரிய பெரிய பண்ணை வீடுகளைக் கட்டினர்.
வார இறுதியில் குடும்பத்துடன் வந்து ஓய்வெடுக்கவும், ஜாலியாக பொழுது போக்கவும் இதுபோன்ற பண்ணை வீடுகளைக் கட்டினர். ஆனால் சமீப காலமாக இந்த பண்ணை வீடுகளில் பல விபச்சார விடுதிகள் போலவும், கேளிக்கை கூடாரங்களாகவும் மாறி வருகின்றன.
கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட பண்ணை வீடுகள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளன. இங்குள்ள பல வீடுகளில் குடும்பம் போல தங்கியிருந்து விபச்சாரம் செய்வதாக முன்பு புகார்கள் எழுந்தன. இதையடுத்து போலீஸார் அவ்வப்போது ரெய்ட் நடத்தி பல விபச்சாரப் பெண்களைப் பிடித்து வந்தனர்.
மேலும், சமீபத்தில் சிவாஜி பட யூனிட்டாருக்கு இயக்குநர் ஷங்கர் தனது பண்ணை வீட்டில் கொடுத்த மது விருந்தின்போது ஒலிப்பதிவாளர் ஒருவர் அதிகம் குடித்து விட்டு நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தார். இதையடுத்து பண்ணை வீடுகளில் குடி, கூத்துக்கும் போலீஸார் தடை விதித்தனர்.
இந் நிலையில் இந்தப் பகுதியில் குடும்ப விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பதாக விபச்சாரத் தடுப்புப் போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
அதாவது பண்ணை வீடுகளுக்கு விபச்சார அழகிகளை கூட்டி வந்து மனைவி, உறவினர் என்ற பெயரில் தங்கி சமைத்து சாப்பிட்டு விட்டு, ஜாலியாக இருப்பதுதான் குடும்ப விபச்சாரம். பக்கத்தில் உள்ளவர்களுக்கு எங்கேயோ வசிப்பவர்கள் ஓய்வுக்காக வந்துள்ளனர் என்றுதான் தெரியும், விபச்சாரம் என்பது புரியாது.
சில நாட்கள் இப்படி குடும்பம் என்ற போர்வையில் ஜாலி செய்து விட்டு அழகிகளுக்கு நல்ல தொகையையும் கையில் கொடுத்து விட்டு இடத்தைக் காலி செய்து விடுவார்கள் சம்பந்தப்பட்ட ஆண்கள்.
இந்த குடும்ப விபச்சாரம் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்குமாறு விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் சில பண்ணை வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். ஒரு வீட்டில் சோதனையிட்டபோது அங்கிருந்து இரண்டு பெண்கள் ஒரு ஆண் ஆகியோர் பின் வாசல் வழியாக தப்பி ஓடினர்.
ஆனால் போலீஸார் விரட்டிப் பிடித்ததில் ஒரு பெண் மட்டும் சிக்கினார். மற்றொரு பெண்ணும், அவருடன் இருந்த ஆணும் தப்பி விட்டனர்.
பிடிபட்ட பெண்ணிடம் விசாரித்ததில்,
நான் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பெண். இப்போது தப்பி ஓடியவர் துரைப்பாக்கம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர். நான் ஒரு வழக்குக்காக அந்த சப் இன்ஸ்பெக்டரை அணுகியபோது அவருடன் தொடர்பு ஏற்பட்டது.
இப்படித்தான் அடிக்கடி இங்கு வந்து உல்லாசமாக இருப்போம். இன்று கூட வேறு ஒரு பெண்ணையும் சப் இன்ஸ்பெக்டர் கூட்டி வந்து உல்லாசமாக இருந்தார் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த சப் இன்ஸ்பெக்டரைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர். பிடிபட்ட பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனராம். கணவர் இறந்து விட்டார்.
இதேபோல இன்னொரு பண்ணை வீட்டில் 3 பிரபல நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதாக போலீஸாருக்கு உறுதியான தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். ஆனால் போலீஸ் வருவதை மோப்பம் பிடித்து விட்ட அந்த நடிகைகளும், அவர்களுடன் ஜாலியாக இருந்தவர்களும் தப்பி ஓடி விட்டனர்.
இந்த வேட்டை தொடரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications