ஹமீத் அன்சாரிக்கு வீடு கிடைத்தது!
டெல்லி:முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் தனது அரசு வீட்டை காலி செய்யாததால், புதிய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரிக்கு வீடு இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக அவர் ஹரியாணா பவனில் தங்க வைக்கப்பட்டார்.
இந் நிலையில் ஷெகாவத் இன்று துணை ஜனாதிபதி இல்லத்தை காலி செய்துவிட்டு டெல்லி ராஜஸ்தான் பவனில் குடியேறினார்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் புதிய குடியரசுத் துணைத் தலைவராக ஹமீத் அன்சாரி வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு அதிகாரப்பூர்வ வீட்டை ஒதுக்க வேண்டும்.
![]() |
ஆனால் பதவியிலிருந்து விலகியுள்ள துணை குடியரசுத் தலைவர் ஷெகாவத் அரசு வீட்டைக் காலி செய்யவில்லை.
இதனால் அன்சாரிக்கு வீடு ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரை தற்காலிகமாக ஹரியானா பவனில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அன்சாரிக்காக, ஏற்கனவே அங்கு தங்கியிருந்தவர்களை வெளியேற்றிய அதிகாரிகள் அன்சாரிக்கு அந்த பவனை ஒதுக்கினர்.
![]() |
இந் நிலையில் இன்று ஷெகாவத் தனது இருப்பிடத்தை காலி செய்தார்.
ராஜ்யசபா: தலைமை தாங்கிய அன்சாரி
இந் நிலையில், இன்று முதல் முறையாக ராஜ்யசபாவுக்கு வருகை தந்து கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினார் அன்சாரி.
அன்சாரியை வரவேற்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அவர் பேசுகையில், இந்த அவையின் மதிப்புக்குரிய தலைவராக அன்சாரியை வரவேற்பதில் பெருமைப்படுகிறேன்.
இந்த அவையின் மாண்பு, கண்ணியத்தைக் காக்க ஹமீது அன்சாரி பாடுபடுவார் என்று நம்புகிறேன். எனது அரசின் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் உங்களுக்கு இருக்கும். அதேபோல, அவையின் அனைத்து உறுப்பினர்களும் ராஜ்யசபா தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
துணை குடியரசுத் தலைவராக இருப்பவர்கள்தான் ராஜ்யசபாவின் தலைவராகவும் செயல்படுவார்கள். அந்த வகையில் இன்று ராஜ்யசபா கூட்டத்திற்கு வந்த அன்சாரி முதல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
இதேபோல ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கானும், அன்சாரியை வரவேற்றுப் பேசினார். எதிர்க்கட்சித் தலைவர் ஜஸ்வந்த் சிங், எதிர்க்கட்சிகள் சார்பில் வரவேற்புரை நிகழ்த்தினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்














Click it and Unblock the Notifications