வாய் பேச முடியாதவர் தீயில் கருகி பலிகாது கேட்காததால் பரிதாபம்
சென்னை:சென்னை அருகே தீ விபத்தில் சிக்கிக் கொண்ட வாய் பேச முடியாத நபர், பரிதாபமாக இறந்தார்.
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. 40 வயதாகும் இவருக்கு வாய் பேச முடியாது. காதும் கேட்காது.
இவர் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது மின் வெட்டு ஏற்பட்டது. இதையடுத்து இவரது தாயார் ஜெயா, வீட்டில் சிம்னி விளக்கைப் பொருத்தி வைத்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சிம்னி விளக்கு கவிழ்ந்து விழுந்து தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து ஜெயா அலறி அடித்தபடி வெளியே வந்தார். ஆனால் தூங்கிக் கொண்டிருந்த பழனிக்கு தீவிபத்து ஏற்பட்டது தெரியவில்லை.
வீட்டுக்கு வெளியே வந்து கூச்சல் போட்ட ஜெயா, பழனியை வெளியே வருமாறு கூறி சத்தம் போட்டார். ஆனால் பழனிக்கு காது கேட்காததால் அவரது குரல் பழனியை எட்டவில்லை.
இந்த நிலையில் தீயின் வெப்பத்தால் பழனி விழித்தெழுந்தார். தன்னைச் சுற்றி தீ பரவியுள்ளதைப் பார்த்து திடுக்கிட்டார். ஆனால் உதவி கேட்டு குரல் எழுப்ப முடியாததால் தீயில் சிக்கிக் கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தீயை அணைத்த பின்னர் உள்ளே போய் பார்த்தபோது பழனி பரிதாபமாக கருகி இறந்து கிடந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications