பெரியகுளம் நக்சல்கள் குண்டர் சட்டத்தில் கைது
தேனி:பெரியகுளம் முருகமலைப் பகுதியில் ஆயதப் பயிற்சி எடுத்தபோது பிடிபட்ட 4 நக்ஸலைட்டுகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தேனி மாவட்ட கலெக்டர் ஹர்சகாய் மீனா பிறப்பித்துள்ளார்.
ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட இவர்களை மலைவாழ் கிராம மக்கள் கூட்டு சேர்ந்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து நால்வரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களிடம் கிடைத்த தகவல்களை வைத்து தமிழகம் முழுவதும் நக்ஸல் வேட்டை நடந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட நக்சலைட்டுகளான பழனிவேல், முத்துச் செல்வன், கார்த்தி, வேல்முருகன் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திண்டுக்கல் டிஎஸ்பி சேதுராமன் பரிந்துரை செய்தார்.
இதை ஏற்ற தேனி மாவட்ட கலெக்டர் 4 பேரையும் அந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications