நேரு ஏற்றிய நாட்டின் முதல் தேசிய கொடி எங்கே?

Subscribe to Oneindia Tamil

டெல்லி?1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது டெல்லியில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏற்றிய முதல் தேசியக் கொடியைக் காணவில்லை. அவை எங்கிருக்கின்ன என்றும் தெரியவில்லை. அவை தொலைந்து போய் விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில், மெளன்ட் பேட்டன் மற்றும் பெரும் திரளானோரின் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இந்தியாவின் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினார் நேரு.

அடுத்த நாள் இந்தியா கேட் பகுதியில், காலை 8.30 மணிக்கு இங்கிலாந்தின் யூனியன் ஜாக் கொடி கீழிறக்கப்பட்டு, இந்தியாவின் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் வகையில் ஏற்றி வைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 16ம் தேதி காலை செங்கோட்டையிலும் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் ஏற்றி வைக்கப்பட்ட 3 தேசியக் கொடிகள் தற்போது எங்கே இருக்கின்றன என்று தெரியவில்லை. அவை தொலைந்து போய் விட்டதாக கூறப்படுகிறது.

இந்தக் கொடிகள் குறித்து அதிகாரப்பூர்வமான ஆவணத் தகவல் எதுவும் அரசு வசம் இல்லை. இவற்றைக் கண்டுபிடிக்கவும் அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

தேசிய அருங்காட்சியகம், செங்கோட்டை அருங்காட்சியகம், தேசிய ஆவணக் காப்பகம், நெரு நினைவிடம், குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம், நாடாளுமன்ற அருங்காட்சியகம் என பல இடங்களில் தேடியும் இந்தக் கொடிகள் குறித்த தகவல் ஏதும் இல்லை.

சுதந்திர இந்தியாவில், நேரு ஏற்றி வைத்த முதல் தேசியக் கொடிகள் எங்கு இருக்கின்றன என்ற விவரம் மத்திய கலாச்சாரத் துறையிடமும் இல்லை.

இதுகுறித்து கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், பாதுகாப்பு அமைச்சகம்தான் சுதந்திர தின விழாக்களை கவனிப்பது வழக்கம்.

எனவே அவர்கள்தான் இதுகுறித்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். கொடிகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+