முரசொலி மாறன் பிறந்த நாள்:மன்மோகன், கருணாநிதி, சோனியா அஞ்சலி
சென்னை:மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 73வது பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து இன்று தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
படத்திற்கு துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மாநிலங்களவை துணைத் தலைவர் ரகுமான்கான், பாஜக தலைவர் அத்வானி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராம் விலாஸ் பாஸ்வான், சிவராஜ் பீட்டீல், பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி, திமுக எம்.பி. திருச்சி சிவா, எம்.பிக்கள் தங்கபாலு, டி.ராஜா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில், முரசொலி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் சிலைக்கு முதல்வர் கருணாநிதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதி இளம்வழுதி, மத்திய அமைச்சர் ராசா, சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்டோரும் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
சன் டிவி ரூ 1 கோடி உதவி:
மாறனின் பிறந்த தினத்தையொட்டி சன் டிவி அறக்கட்டளை சார்பில் ஏழை, எளியவர்களுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான உதவிகள் செய்யப்படவுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
ராணி மேரிக் கல்லூரி கட்டட நிதிக்கு இதிலிருந்து ரூ. 20 லட்சத்தையும் அவர் வழங்கினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications