மும்பையில் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை:மும்பையில் நேற்றிரவு ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகி விட்டனர்.
![]() |
மத்திய மும்பையின் லாமிங்டன் சாலையில் உள்ள கிரிதர் பவன் என்ற கட்டிடம் 80 வருட மிகப் பழமையானது.
5 மாடி கட்டிடமான இதில் கட்டிடத்தின் மேல்தளத்தில் உள்ள 3 மாடிகள் நேற்றிரவு இடிந்து விழுந்தன. இதில் 3வது தளத்தில் வீடுகளும், அதற்கு மேல்தளத்தில் விடுதிகளும் உள்ளன. தரைத் தளத்தில் கடைகள் உள்ளது.
![]() |
கட்டிடத்தின் இடிபாடுகளிலிருந்து இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.














Click it and Unblock the Notifications