அணு ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு புதியவழியில் நெருக்கடி-இடதுசாரிகள் திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து இரண்டாவது நாளாக இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

நேற்று நடந்த இக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு அளித்து வரும் நிபந்தனையற்ற ஆதரவை வாபஸ் பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இனிமேல் பிரச்சனைகளின் அடிப்படையில் தான் என்ற முடிவுக்கு இடதுசாரிகள் வந்துள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த ஒப்பந்தத்தை மிக மிகத் தீவிரமாக எதிர்த்து வருகிறது. ஆதரவை வாபஸ் பெற்றுவிடலாம் என்ற முடிவில் இருக்கிறார் அக் கட்சியின் தேசிய செயலாளர் பர்தான்.

ஆனால், அவரை சமாதானப்படுத்தும் வேலைகளில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எப்பாடுபட்டாவது இந்த ஒப்பந்தத்தை அமலாக்குவதை தடுப்பது என்ற முடிவுக்கு அக் கட்சி வந்துள்ளது. இதற்கு பிரதமர் ஒப்புக் கொள்ளாவிட்டால் ஆதரவை வாபஸ் பெற்று, மத்திய கூட்டணி அரசை சிறுபான்மை அரசாக்கி செயல்பட வைப்பது என்ற முடிவை அக் கட்சி எடுத்துள்ளது.

ஆட்சியைக் கவிழ்க்காமல் சிறுபான்மை அரசாக வைத்து, எந்த மசோதாவையும் நிறைவேற்ற வாய்ப்பளிக்காமல் தடுத்து, திணறடிப்பது என்று இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+