மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கஓ.பி. தலைமையில் சிறப்புப் பூஜை!

Subscribe to Oneindia Tamil

நெல்லை:திமுக ஆட்சி அகன்று, மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டி தட்சிணாமூர்த்தி கோவிலில் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.

தென்னகத்தின் திரிகூடமலை அடிவாரமான திருநெல்வேலி மாவட்டம் புளியரையில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் புகழ்பெற்ற குருஸ்தலமாகும்.

கடந்த 8-ந் தேதி சனி பெயர்ச்சி முடிந்துள்ளது. நவம்பர் மாதம் குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக தேரத்ல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக பிரமுகர்கள் இன்று அதிகாலை இக்கோவிலுக்கு வந்தனர்.

Paneerselvam

இக்குழுவில் கே.ஏ.செங்கோட்டையன், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவினர் கோவிலில் சிறப்புப் பூஜை நடத்தினர்.

இந்த திடீர் சிறப்பு பூஜை குறித்து அதிமுக தரப்பில் கேட்டபோது, குரு பெயர்ச்சியால் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அகன்று, அ.தி.மு.க ஆட்சி மலர வேண்டும். அதை வேண்டித்தான் இந்த சிறப்பு பூஜை என்றனர்.

புறக்கணித்த அவைத் தலைவர்:

இந்த நிலையில், நெல்லை புறநகர், மாநகர் மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர்களின் ஆலோசனைக் கூட்டம் ஐந்தருவியிலுள்ள ஒரு தனியார் விடுதி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நயினார் நாகேந்திரன், கருப்பசாமி, தளவாய் சுந்தரம், முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன், புறநகர் மாவட்ட செயலாளர் பி.செந்தூர் பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கும், மாவட்ட அவைத் தலைவர் அண்ணாமலைக்கும் கருத்து வேறுபாடு தொடர்ந்து இருந்து வருவதால் அண்ணாமலை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+